• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடா சட்டத்தை வாபஸ் பெற முடியாது: பா.ஜ.க. திட்டவட்ட அறிவிப்பு

By Staff
|

சென்னை:

பொடா சட்டத்தை வாபஸ் பெற முடியாது என பாரதீய ஜனதா கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் பொடா சட்ட விவகாரத்தை முன் வைத்து கூட்டணியில் இருந்து விலகுவோம் என மத்திய அரசைமிரட்டி வரும் திமுக, மதிமுக, பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் பா.ஜ.க. நேரடி மோதலைத் தொடங்கியுள்ளது.

பொடா சட்டத்தின் கீழ் வைகோ, பழ.நெடுமாறன், கோபால் உள்பட 20க்கும் மேற்பட்டவர்களை முதல்வர்ஜெயலலிதா கைது செய்துள்ளார்.

பொடா சட்டத்தை வாபஸ் வாங்குவது தான் அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஒரே வழிஎன திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க,மதிமுகவும் இதே கருத்தையே தெரிவித்துள்ளன.

துணைப் பிரதமர் அத்வானியின் கோஷ்டியைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்றுசென்னையில் உள்ள தனது கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கூறியதாவது:

பொடா சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற திமுக, மதிமுக, பா.ம.கவின் கோரிக்கையை ஏற்க முடியாது.பொடாவை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. எல்லை தாண்டிய பயங்கவாதத்தை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை தேசிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.

ஐ.எஸ்.ஐ. தூண்டுவிட்டு வரும் தீவிரவாதத்தைத் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் தேவைப்படுகிறது. இதனால் பொடாசட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும். அதை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை.

தேசிய பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியது. இதில் விட்டுத் தரவே முடியாது. இந்தச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று சொல்பவர்கள் அதை பொடா சட்டத் திருத்தக் கமிட்டியிடம் போய் தெரிவிக்கலாம். பொடாதவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராயும் கமிஷனிடம் போய் தெரிவிக்கலாம்.

அதுவும் போதவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். வைகோ விஷயத்தில் பொடா தவறாகப்பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளோம்.

தமிழகத்தில் பொடா தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சிலர் கூறுவதால் மட்டும் அந்தச் சட்டத்தை வாபஸ்பெற்றுவிட முடியாது. அதே நேரத்தில் பொடா பிரச்சனைக்காக கூட்டணியைவிட்டு திமுக வெளியேறாது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் காட்டு தர்பார் நடத்தி வருகின்றனர். அங்குஜனநாயகமே இல்லை.

திரிசூலங்களை மக்களுக்கு வினியோகித்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தொகாடியா மீது ராஜஸ்தான்காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது மக்களை திசை திருப்பத் தான்.

அதே போல மத்தியப் பிரதேசத்தில் அனுமாருக்கு முட்டைகள் சேர்க்கப்பட்ட கேக்கை பா.ஜ.க. தலைவர் உமாபாரதி வழங்கியதாக காங்கிரஸ் சொல்வதும் தவறானது. அந்த கேக்கில் முட்டையே இல்லை என உமா பாரதிகூறிவிட்டார்.

வட இந்தியாவில் 4 மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல்களில் பா.ஜ.க. வெல்லும். இந்த 4 மாநிலங்களிலும்காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசுகிறது. இந்தத் தேர்தல்கள் பா.ஜ.கவுக்கு செமி-பைனல் மாதிரி.

அடுத்து நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமே 300 இடங்களைப் பிடிக்கும் என்றார்.

வெங்கைய்யா நாயுடு மூலமாக பொடா சட்ட விவகாரத்தில் திமுக, மதிமுக, பா.ம.கவுடன் நேரடி மோதலுக்குபா.ஜ.க. களம் அமைத்துள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X