மும்பை to
டெல்லி:
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்ஸ் நோயாளி ஒருவர் அங்கிருந்து தப்பிடெல்லிக்குச் சென்றபோது டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டார்.
ஹாங்காங்கைச் சேர்ந்த வியாபாரியான மூர்த்தி என்பவர் சமீபத்தில் விமானம் மூலம் மும்பைக்குவந்தார். அங்கு அவரைப் பரிசோதனை செய்தபோது அவர் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மும்பையில் உள்ள கஸ்தூரி பாய் மருத்துவமனையில் மூர்த்தி சேர்க்கப்பட்டார். அங்கு
அவருக்குத் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் மருத்துவமனையிலிருந்து எப்படியோ தப்பிச் சென்று விட்டார். ஆனால்டெல்லி விமான நிலையத்தில் அவர் பிடிபட்டார்.
டெல்லி விமான நிலையத்தில் சார்ஸ் நோய் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது மூர்த்திபிடிபட்டார். அதன் பின்னர்தான் அவர் மும்பை மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய விவரம்தெரிய வந்தது.
டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மூர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். மும்பைமருத்துவமனையிலிருந்து அவர் எவ்வாறு தப்பினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஹாங்காங்கிலிருந்து இந்தியாவிற்கு வந்த அவர் சென்னைக்கும் வர இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் முதல் "சார்ஸ்":
இந்நிலையில் கொல்கத்தாவில் முதல் சார்ஸ் நோயாளி கண்டறியப்பட்டுள்ளார்.
சீனாவிலிருந்து சமீபத்தில் மும்பை வழியாகக் கொல்கத்தாவுக்குத் திரும்பிய 42 வயதுள்ளஆஷித்தவா புரகாயஸ்தா என்ற என்ஜினியருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்துஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சார்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய ரத்தம்பரிசோதிக்கப்பட்டு அவருக்கு சார்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று காலை பங்களாதேஷ் விமானத்தில் வந்து இறங்கிய அகமது என்ற பயணிக்குக்கடும் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு சார்ஸ் நோய் இருக்குமோ என்றுகருதப்படுகிறது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


