For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளைகுடா நாடுகளுக்கு 37 ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:

வளைகுடா நாடுகளுக்குச் செல்ல வேண்டிய 37 விமானங்களை ஏர்-இந்தியா நிறுவனம் ரத்துசெய்துள்ளது.

சார்ஸ் பாதித்துள்ள நாடுகளுக்குச் செல்ல மாட்டோம் என்றும், தங்களுடன் வரும் விமானஊழியர்கள் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வரவில்லை என்பதற்கானசான்றிதழை வழங்க வேண்டும் என்றும் கோரி ஏர்-இந்தியா பைலட்டுகள் ஸ்டிரைக் நடத்திவருகின்றனர்.

இதையடுத்து ஏர்-இந்தியா நிறுவனம் பல விமானங்களை ரத்து செய்துள்ளது. இந்த மாத இறுதி வரைவளைகுடா நாடுகளுக்குச் செல்ல வேண்டிய 37 ஏர்-இந்தியா விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அந்த நாடுகளுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இயக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஏர்-இந்தியா விமான பைலட்டுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து,அவர்களில் சிலர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் விமானங்களை இயக்குவதற்காக ஓய்வு பெற்ற பைலட்டுகள் சிலரை அழைக்கவும்ஏர்-இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதைத் தவிர மும்பையிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்குச் செல்லும்பயணிகளின் வசதிக்காக அங்கிருந்து டெல்லிக்கு 2 சிறப்பு விமானங்களையும் ஏர்-இந்தியாநிறுவனம் இன்று இயக்கியது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X