அபின், ஹெராயின் கலந்த போதை ஊசி விற்ற வாலிபர், பெண் கைது
சென்னை:
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மருந்து ஊசிகளை விற்றதாக ஒரு வாலிபரையும்பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 1,000 போதை ஊசிகள்கைப்பற்றப்பட்டன.
சென்னை வண்ணாரப்பேட்டை கல்லறைத் தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில்திரிந்து கொண்டிருந்த ஒரு வாலிபரைப் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் பெயர் ஜெயக்குமார் என்பதும், துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும்தெரிய வந்தது.
அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோதுதான் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதைஊசி மருந்துகளை விற்று வந்தததாகத் தெரிய வந்தது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் குண்டூர் ஆகிய ஊர்களிலிருந்து போதை ஊசிகளை வாங்கி,அதில் அபின் மற்றம் ஹெராயின் ஆகிய போதைப் பொருட்களைக் கலந்து ரூ.35 வீதம் விற்றுவந்துள்ளார் ஜெயக்குமார்.
இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்பூலோக லட்சுமி என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து1,000 போதை ஊசிகளையும் போலீசார் கைப்பற்றினர்.
அபின், ஹெராயின் கலந்த போதை மருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை சோதனைசெய்தும் காண்பித்தார் ஜெயக்குமார்.


