தேர்வு ஒத்திவைப்பு ஏன்?: ராணி மேரி கல்லூரி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை:
தங்கள் உத்தரவையும் மீறி தேர்வுகளை ஒத்திவைத்துள்ள ராணி மேரி கல்லூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளனர்.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள ராணி மேரிகல்லூரியை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதை எதிர்த்து அக்கல்லூரி மாணவிகள்போராட்டத்தில் குதித்தனர்.
மேலும் கல்லூரியை இடிக்கத் தடை விதிக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பலஅமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து ராணி மேரி கல்லூரியைஇடிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்தது.
இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு மாணவிகள் கல்லூரிக்குத் திரும்பினர். இந் நிலையில் தான்கடற்கரைப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்களை இடிக்கத் தடை விதித்து மத்தியசுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
இந் நிலையில் அந்தக் கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத்தேர்வுகளையும் கூட வேண்டா வெறுப்பாகத் தான் ராணி மேரிக் கல்லூரி நிர்வாகம் தொடங்கியது.
கடந்த 25ம் தேதி தொடங்கி இருக்க வேண்டிய தேர்வுகளை, முதல்வர் ஜெயலலிதாவின்உத்தரவுப்படி நிறுத்தி வைத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து தேர்வுகள் இன்று (28ம் தேதி) தான்தொடங்கப்பட்டன.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போதுவழக்கு தொடர்பாக ஆஜரான மத்திய சொலிசிட்டர் ஜெனரல் கோபாலன், ராணி மேரி கல்லூரியைஇடிக்க சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞரான என்.ஆர். சந்திரன், இது நீதிமன்றத்தைஅவமதிக்கும் செயலாகும். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தன்னிச்சையாக இந்த உத்தரவைப்பிறத்துள்ளார். இது சட்டவிரோத செயலாகும். இதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குதொடரப்படும். இதற்காக தமிழக அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வைகை, ராணி மேரிகல்லூரியின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். கல்லூரித் தேர்வுகள்வழக்கம் போல் ஏப்ரல் 23ம் தேதி தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட,அக்கல்லூரி நிர்வாகம் ஏப்ரல் 28ம் தேதிக்கு தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக அவர் கூறினார்.
இதைக் கேட்ட உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி இப்ராகிம்கலிபுல்லா ஆகியோர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது ஏன் என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்விஎழுப்பினர்.
மேலும் இது தொடர்பாக அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என்றும்நீதிபதி சுபாஷன் ரெட்டி கேட்டார். அப்போது பேசிய அரசு வழக்கறிஞர், மாணவிகள் வசதிக்காகத் தான்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்றார்.
பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
செமஸ்டர் தேர்வுகள் முடியும் வரை ராணி மேரி கல்லூரியின் விடுதியை கல்லூரி நிர்வாகம் மூடக்கூடாது. தேர்வுகள் அனைத்தும் முடிந்த மறுநாள்தான் விடுதி மூடப்பட வேண்டும்.
மேலும் விடுமுறை முடிந்து கல்லூரி மீண்டும் திறக்கப்படுவதற்கு முதல் நாளே விடுதி திறக்கப்படவேண்டும்.
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றுநீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.


