For Daily Alerts
Just In
ஊட்டியில் தமிழக ஆளுநர்: ஒரு வாரம் ஓய்வு
ஊட்டி:
ஒரு வார காலம் ஓய்வுக்காக ஊட்டி வந்து சேர்ந்துள்ளார் தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ்.
ஒவ்வொரு கோடை சீஸனிலும் ராமமோகன் ராவ் ஊட்டி வருவது வழக்கம். அதன்படி இந்தஆண்டும் ஊட்டிக்கு வந்துள்ளார் அவர்.
நேற்று மாலை சுமார் 4 மணிக்கு ஊட்டி வந்து சேர்ந்த அவருக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர்செல்லமுத்து, எஸ்.பி. பாரி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். ராமமோகன் ராவுடன்அவருடைய மனைவி உமா மற்றும் மகன் ஆகியோரும் வந்துள்ளனர்.
சுமார் ஒரு வார காலம் ஊட்டியில் தங்கியிருக்கும் தமிழக ஆளுநர் குடும்பத்தினர் இங்குள்ள பலமுக்கியமான இடங்களைக் கண்டு மகிழ்வார்கள்.
அதன் பின்னர் அவர்கள் வரும் மே 5ம் தேதி சென்னை திரும்புவார்கள்.


