For Daily Alerts
Just In
விமானியில்லா விமானம் "லக்ஷயா" சோதனை வெற்றி
பலசூர் (ஒரிசா):
பைலட் இல்லாமல் இயங்கும் உளவு விமானமான "லக்ஷயா" இந்தியாவில் வெற்றிகரமாகபரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
கடந்த 2000ம் ஆண்டிலேயே இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்ட "லக்ஷயா" விமானத்திற்குபுதிய என்ஜின் மாற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரிசாவின் சண்டிப்பூர் ஏவுகணைத் தளத்தில் இந்தச் சோதனை வெற்றிகரமாகமேற்கொள்ளப்பட்டது.
தரையிலிருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் மட்டுமே இயக்கப்படும் இந்த விமானம் எதிரிநாட்டுக்குள் ஊடுருவி உளவு பார்க்கக் கூடியது.
"லக்ஷயா" விமானம் முழுக்க முழுக்க இந்தியாவின பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப்பிரிவினரால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


