தனியார் பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை: தடுக்க ராமதாஸ் யோசனை
சென்னை:
நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பொறியியல் மற்றும்மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் நுழைவுத் தேர்வுமதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பொறியியல்,மருத்துவக் கல்லூ மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது.
அதேபோலவே தமிழகத்திலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அப்படிச் செய்வதன்மூலம் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடம் பணம்வசூலிப்பதைத் தடுக்க முடியும்.
மேலும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை வசூலித்தால் 3 முதல் 7 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த உத்தரவைக் கடுமையாகஅமல்படுத்த வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ராமதாஸ்.


