தனியாரிடம் பஸ்களை தாரை வார்க்கவில்லை: ஜெ. விளக்கம்
சென்னை:
போக்குவரத்துத் துறை முற்றிலுமாகத் தனியார் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டசபையில் பா.ம.க. உறுப்பினர் எடப்பாடி ஐ. கணேசன் பேசுகையில்,போக்குவரத்துத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, போக்குவரத்துத் துறை முற்றிலும் தனியாருக்கு கொடுக்கப்படமாட்டாது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றார்.
பின்னர் பாமக தலைவர் ஜி.கே. மணி பேசுகையில், ஒரு சில தடங்களை மட்டும் தற்போதுதனியாரிடம் கொடுக்கவுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். ஆனால் படிப்படியாக மற்ற வழித்தடங்களும் தனியாருக்குக் கொடுக்கப்பட்டு விடும் என்ற பேச்சு உள்ளது. அப்படி நடந்தால்கிராமப்புற மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்றார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர், கிராமப்புற மக்களுக்கு கஷ்டம் ஏற்படுத்தும் வகையில் அரசுஎப்போதும் செயல்படாது என்றார்.
முன்னதாக போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து பேசிய போக்குவரத்துஅமைச்சர் விஸ்வநாதன், போக்குவரத்து தனியார் மயமாக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
எனவே அனைத்து வழித் தடங்களையும் தனியாரிடம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருசில வழித் தடங்களை மட்டுமே தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.


