For Daily Alerts
Just In
வீரப்பன் காட்டுக்குள் செல்கிறார் கர்நாடக அமைச்சர்
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் நடமாட்டம் உள்ளதாகக் கருதப்படும் மாதேஸ்வரன் மலைப் பகுதிக்குகர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே செல்லவுள்ளார்.
பாலாறுப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த கர்நாடக அதிரடிப்படை காவல்துறைக்கண்காணிப்பாளர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வீரப்பன் தேடுதல் வேட்டை புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தேடுதல் பணிகளைபார்வையிடுவதற்காக மாதேஸ்வரன் மலைப் பகுதிக்கு கார்கே வரவுள்ளார்.
அதிரடிப்படைக்கு கிராமமக்கள் ஆதரவு பெருகி வருகிறது. வீரப்பன் கொடுத்த பணம் பெரிதாகத்தெரிந்த அவர்களுக்கு தற்போது அதிரடிப்படை அறிவித்துள்ள ரூ.5 கோடி பரிசுப் பணம்பெரிதாகத் தெரிவதால், அதிரடிப்படைக்குத் தேவையான தகவல்களை அவர்கள் அளித்துவருகிறார்கள் என்றார் பிரகாஷ்.


