படிக்காதவன் பட பாணியில் சாராயம் கடத்திய பெண்கள்!
சென்னை:
கர்ப்பிணிகள் போல் வயிற்றில் சாராய பாக்கெட்டுகளைக் கட்டிக் கொண்டு கடத்திய 2 பெண்களைப்போலீசார் கைது செய்தனர்.
"படிக்காதவன்" படத்தில் நடிகை அம்பிகா வயிற்றில் சாராய பாக்கெட்டுகளைக் கட்டிக் கொண்டுகர்ப்பிணி போல நடித்து சாராயத்தைக் கடத்துவார். அதே பாணியில் தற்போது சென்னையில் 2பெண்கள் சாராய பாக்கெட்டுகளைக் கடத்தி வந்துள்ளனர்.
வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஒரு ஆட்டோ நிற்காமல் சென்றது. அந்த ஆட்டோவை போலீசார் துரத்திச் சென்றுநிறுத்தினர்.
ஆட்டோ டிரைவர் உடனடியாக அங்கிருந்து தப்பி விட்டார். ஆட்டோவில் 2 "கர்ப்பிணி" பெண்கள்மட்டும் அமர்ந்திருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவர்கள் வைத்திருந்தசாக்குப் பையை சோதனையிட்டனர்.
அதில் கர்நாடகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சாராய பாக்கெட்டுகள் இருந்தன. உடனடியாகபெண் போலீசார் வரவழைக்கப்பட்டு, இரு பெண்களும் தனியிடத்தில் சோதனையிடப்பட்டனர்.அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இரு பெண்களும் கர்ப்பிணிகள் இல்லை என்றும், அவர்களது வயிற்றில் தலா 500 சாராயபாக்கெட்டுகள் இருந்ததும் தெரிய வந்தது. மிகவும் அழகாக வயிற்றில் சாராய பாக்கெட்டுகளைகட்டியிருந்தனர் அந்தப் பெண்கள்.
அவர்களது பெயர்கள் பச்சை வள்ளி மற்றும் உமா என்பது தெரிய வந்தது. இருவரும் சென்னைகாசிமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள். அடிக்கடி கர்நாடகத்திற்குச் சென்று சாராய பாக்கெட்டுகளைவாங்கி வருவது இவர்களது வழக்கமாம்.
சாராயம் கடத்திய 2 பெண்களையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
போலி மது பாட்டில்கள் பறிமுதல்:
இதற்கிடையே மதுரையில் ஆயிரக்கணக்கான போலி மது பாட்டில்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் உள்ள சில பெட்டிக் கடைகளில் போலி மது பாட்டில்கள் விற்கப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து மாநகர் முழுவதும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது முனிச்சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சாகுல் ஹமீது என்பவர் போலி மது பாட்டில்களைவிற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்து, அங்கிருந்த ஏராளமானபோலி மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மதுரையின் வேறொரு பகுதியிலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்தும் ஏராளமானபோலி மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.


