சூதாட்டம் நடத்தும் ரெளடிகள்: சேர்ந்து விளையாடும் ஏட்டுகள்
மதுரை:
சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுக்கள் 2 பேர் உள்பட 22 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.தலைமறைவாகி விட்ட மேலும் 2 ஏட்டுக்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் கிளப்கள் என்ற பெயரில் சூதாட்ட மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.மதுரையைச் சேர்ந்த ரெளடிகள், ஜாதிக் கும்பல்கள், கட்டைப் பஞ்சாயத்து கோஷ்டிகள் இதனை நடத்திவருகின்றன.
இந்த கிளப்களுக்கு மதுரை போலீசாரின் முழு ஆசியும் உண்டு. கிட்டத்தட்ட லாஸ் வேகாஸ் மாதிரி சூதாட்டம்,உற்சாக பான வினியோகம், விபச்சாரப் பெண்கள் நடமாட்டம் என இந்த கிளப்கள் கிளுகிளு கிளப்களாகநடத்தப்பட்டு வருகின்றன.
மதுரையில் புற்றீசல் மாதிரி இவை பெருகி வருகின்றன.
இந்த கிளப்களின் உரிமையாளர்கள் அந்தந்தப் பகுதி போலீஸ் நிலையங்களை கவனித்து விடுகின்றனர். இதனால்இவர்கள் எந்தத் தடங்கலும் இல்லாமல் தொழில் நடத்தி வருகின்றனர். அவ்வப்போது பெயருக்கு ரெய்ட் நடத்திஇரண்டு குவாட்டர் பாட்டில்களை மட்டும் கைப்பற்றி, கேஸ் போட்டு, அதையும் ஊத்தி மூடிவிடுவது மதுரைபோலீசின் வழக்கமாக உள்ளது.
இந்த கிளப்கள் இருக்கும் பக்கம் பொது மக்கள், குறிப்பாக பெண்கள் நடமாட முடியாத நிலை உருவாகி வருகிறது.இதையடுத்து இந்த கிளப்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களுக்குகமிஷ்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்கட்டமாக கிளப்கள் மிக அதிகமாக உள்ள ஜவஹர் நகர், விஸ்வநாத தாஸ் தெரு ஆகிய பகுதிகளில் டி.எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் ஒரு படை திடீர் ரெய்ட் நடத்தியது.
அப்போது அங்கிருந்த சூதாடிகள் மத்தியில் திருமங்கலம் நகர் காவல் நிலைய ஏட்டு மருதப்பன், கூடக்கோவில்ஏட்டு தண்டபாணி ஆகியோரும் இருந்தனர். முதலில் அதிர்ச்சியடைந்த தனிப் படை போலீசார் உயர்அதிகாரிகளிடம் பேசிவிட்டு அவர்களைக் கைது செய்தனர்.
மேலும் 20 பேரையும் தனிப் படை போலீசார் கைது செய்தனர்.
ரெய்ட் நடப்பதை எப்படியோ தெரிந்து கொண்ட அருகாமையில் உள்ள கிளப் உரிமையாளர்கள் அதைஅவசரமாக மூடிவிட்டுத் தப்பினர். இதில் ஒரு கிளப்பில் மதுரை தெற்குவாசல் ஏட்டு பிச்சுமணி, திருநகர் காவல்நிலைய ஏட்டு ஜீவா ஆகியோரும் இருந்துள்ளனர்.
அவர்களைப் பிடிக்க போலீசார் சென்றபோது இருவருமே தலைமறைவாகி விட்டனர். இப்போது அவர்களைத்தேடும் பணி நடந்து வருகிறது.


