மருத்துவ மாணவர்கள்- அரசு பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், அரசுக்கும் இடையே இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில்முடிந்தது. இதனால் மாணவர்களின் போராட்டம் நீடிக்கும் என்று தெரிகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைமுன் வைத்து தமிழகம் முழுவதும் கடந்த 11 நாட்களாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர். பயிற்சி மருத்துவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இதனால் அரசு மருத்துவமனைகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறுதமிழக அரசு அழைத்தது. இதை ஏற்று மாணவர்களும் பேச்சுவார்த்தைச் சென்றனர்.
அமைச்சர் தலைமையில்...
சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை தலைமையில் இன்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அரசுத் தரப்பில்சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத், 12மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் ஆகியோரும், மாணவர்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின்போது தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட மாட்டாது என அரசுசட்டரீதியில் உறுதியளிக்க வேணடும் என மாணவர்கள் கோரினர். ஆனால், அதை செம்மலை ஏற்கவில்லை.இதனால் பேச்சு தோல்வியடைந்தது.
உறுதிமொழி தரவில்லை..
பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்த மாணவர் பிரதிநிதி அமுத கலைஞன் கூறுகையில், எங்களதுகோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது குறித்து அமைச்சர் எந்த உறுதி மொழியும் தரவில்லை. எனவேபேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இது எங்களுக்கு அதிருப்தியைத் தந்துள்ளது. மாலையில்மாணவர்கள் கூடிப் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்வோம் என்றார்.
செம்மலை பேட்டி:
அமைச்சர் செம்மலை நிருபர்களிடம் பேசுகையில், புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட மாட்டாதுஎன்று அரசு சட்டரீதியில் உத்தரவாதம் தர வேண்டும் என மாணவர்கள் கேட்கின்றனர். அது போன்றஉறுதிமொழியைத் தரக் கூடிய நிலையில் தமிழக அரசு இல்லை.
ஏனெனில், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தருவது மாநில அரசின் கையில் இல்லை. மாநில அரசுநோ-அப்ஜெக்சன் சான்றிதழ் மட்டுமே தர முடியும். இதைச் சொன்னால் மாணவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.மாணவர்களின் போராட்டம் சட்ட விரோதமானது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவப் பணிகளைச் சமாளிக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மதுரையில் உண்ணாவிரதம்:
இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தொடர் உண்ணாவிரதம்இன்று 5வது நாளை எட்டியது.
பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் உடனடியாக வகுப்புகளுக்குத் திரும்புவோம், அரசுமருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கும் பணியையும் ஆரம்பிப்போம், இல்லாவிட்டால் போராட்டத்தைத்தீவிரப்படுத்துவோம் என்று ஏற்கனவே மாணவர்கள் அறிவித்திருந்தனர்.
டாக்டர்களும் ஸ்டிரைக்?
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மாணவர்களுக்கு ஆதரவாக தாங்களும் போராட்டத்தில் குதிக்கப் போவதாகதமிழ்நாடு மருத்துவர்கள் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இப்போது பேச்சு தோல்வியைடைந்ததால் மருத்துவக் கல்லூரிமாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரமாகும்என்றே தெரிகிறது.


