கோடை மழைக்கு ஏங்கும் சென்னை
சென்னை:
இந்த ஆண்டு கோடை காலத்தின்போது சில நாட்களாவது மழை பெய்யாவிட்டால், சென்னை நகரம் முழுவதும்கடும் குடிநீர்ப் பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் குடிநீர்ப் பஞ்சம் என்பது மிகச் சாதாரண விஷயம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது பெரியஅளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடை காலம் தொடங்கி விட்டது.
வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எல்லாம் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது.ஆனால் சென்னையில் இதுவரை ஒரு தூறல் கூட விழவில்லை.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் கோடைமழை பெய்தால் மட்டுமே ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
செங்குன்றம், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளிலிருந்து தான் சென்னை நகருக்கு குடிநீர்கொண்டு வரப்படுகிறது.
இவற்றில் செங்குன்றம் ஏரியில் மட்டும் தான் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நீர் மட்டும் உள்ளது. இந்த ஏரியில்இப்போது 1,455 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியாகும்.
ஆனால், பூண்டி ஏரியில் 13.8 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு3,231மில்லியன் கன அடியாகும்.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. ஆனால், இருப்பதோ வெறும் 8.1 மில்லியன்கன அடி நீர் தான்.
ரிசர்வ் ஏரி என்று அழைக்கப்படும் செம்பரம்பாக்கத்தின் நிலையும் அதே தான். இங்கு தற்போது வெறும் 60மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.
இந்தச் சூழ்நிலையில் கோடை காலத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் பொதுப்பணித் துறையினரும்,மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தினரும் திணறிப் போய் உள்ளனர்.
கோடை மழை பெய்ய வேண்டும், இல்லாவிட்டால் ஆந்திராவில் தென் மேற்கு பருவ மழை நன்றாக பெய்யவேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றாவது நடந்தால் மட்டுமே சென்னையின் நீர்த் தேவையை இந்தக் கோடையில்சமாளிக்க முடியும்.
அப்படி இல்லாவிட்டால் நெய்வேலி, சென்னையை அடுத்துள்ள மாவட்டங்கள், ஆந்திரா ஆகிய பகுதிகளில்இருந்து லாரி, ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர வேண்டிய கொடிய நிலை ஏற்படலாம் என பொதுப்பணித்துறைஅதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கான அவசரகாலத் திட்டங்களைத் தயார் செய்யும் பணியில் பொதுப் பணித்துறை ஈடுபட்டுள்ளது.


