அட்சய திதியை தினம்: நகை வாங்க க்யூவில் நின்ற மக்கள்
சென்னை:
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ. 120 கோடிக்கும் அதிகமான அளவுக்குதங்கம் விற்பனையாகியுள்ளது.
இந்த தினத்தன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் குவியும், தங்கமும் குவியும் என்பது ஐதீகம். தமிழகத்தில்இந்த நம்பிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விடஅதிகமான தங்க விற்பனை இருந்தது.
இதையடுத்து இந்த ஆண்டும் வழக்கததைவிட கொஞ்சம் அதிகமான விற்பனையை எதிர்பார்த்த நகைக்கடைகளுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. காலை முதலே மக்கள் கடைகளை நோக்கி படையெடுக்கத்தொடங்கினர்.
சென்னை தி.நகரில் உள்ள முன்னணி நகைக் கடைகளில் கியூவில் நின்று தங்கம் வாங்கும் அளவுக்கு மக்கள்கூட்டம் இருந்தது. இதே நிலை தான் தமிழகத்தின் பிற நகர்களிலும் காணப்பட்டது. இரவு வரை நகைக் கடைகளில்கூட்டம் அலைமோதியது.
ஆனால், ஊரகப் பகுதிகளில் நகைக் கடைகளில் கூட்டம் ஏதும் இல்லை.
நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் ரூ. 120 கோடி அளவுக்கு தங்கம் விற்பனை ஆகியிருக்கலாம் என நகைக் கடைஅதிபர்கள் சங்கம் கூறியுள்ளது.


