பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ஒத்திவைப்பு
டெல்லி:
நாடாளுமன்றம், சட்டசபை உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம்இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு ஒத்தி வைத்துவிட்டது.
இந்த மசோதாவை இந்தக் கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்துவோம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.ஆனால், இதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பிற எதிர்க் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை.
இதையடுத்து இந்த மசோதாவை இப்போதைக்கு அறிமுகப்படுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே இருமுறை இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இச் சட்டத்துக்கு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள்ஆகியவை தீவிர எதிர்ப்புத் தெரிவித்தையடுத்து முன்பு ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது தேசிய ஜனநாயகக்கூட்டணியிலேயே இந்தச் சட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முலாயம் சிங்கும், லாலு பிரசாத் யாதவும் இந்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை. இதில் பிற்படுத்தப்பட்டவர்கள்,தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தத்திருத்தத்தைச் செய்தால் மட்டுமே சட்டத்தை நிறைவேற்ற விடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
இந்தச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி அனைத்துக் கட்சிகளின் பெண் எம்.பிக்களும் தொடர்ந்து போராட்டம்நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக மக்களவையில் சபாநாயகர் முரளி மனோகர் ஜோஷிஅறிவித்தவுடன் சமாஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள் ஆகிய கட்சி உறுப்பினர்கள் அவையில்மையத்தில் கூடி கோஷம் போட்டனர்.
இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சபாநாயகர்கூட்டினார்.
இதில் இந்தச் சட்டத்துக்கு சிவசேனை, ஜார்ஜ் பெர்னாண்டசின் சமதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்றதே.ஜ.கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதையடுத்து இந்த சட்ட மசோதா ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மீண்டும் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்தச் சட்டத்துக்கு தமிழக கட்சிகளும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.


