For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறுவை சிகிச்சைகள் நடத்த மாட்டோம்: அரசு டாக்டர்கள் அறிவிப்பு- மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கின்றன

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசின் எச்சரிக்கையையும் மீறி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக திட்டமிட்டபடி போராட்டத்தில் குதிப்போம் எனதமிழக அரசு மருத்துமனை டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தரக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து தமிழகம் முழுவதும்உள்ள 12 மருத்துவக் கல்லூரி மாணவர்களும், பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களூம் கடந்த 2 வாரங்களாக போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துவிட்டது. இந் நிலையில் கல்லூரி விடுதிகளையும் அரசுமூடிவிட்டதால் சாலை மறியல் செய்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைதாகி வருகின்றனர். அவர்களது போராட்டம்தொடர்ந்து கொண்டுள்ளது.

அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து அவர்களைஎஸ்மா சட்டம் கொண்டு அடக்குவோம் என்றும், போராட்டத்தை நசுக்க இரும்புக் கரத்துடன் அரசு செயல்படும் எனவும் தமிழகநலத்துறை அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.

ஆனால், இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படவோ, கவலைப்படவோ மாட்டோம் என தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம்அறிவித்துள்ளது. இன்று இந்தச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கீழ்பாக்கம் மருத்துவமனையில் நடந்தது. இதில் மாநிலம்முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் டாக்டர் பிரகாசம்,

3 கட்டமாக எங்களது போராட்டம் நடக்கும். முதல் கட்டமாக, வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை பெரிய அறுவைசிகிச்சைகளை மட்டுமே செய்வோம். சிறிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மாட்டோம். குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன்கூட செய்ய மாட்டோம் (ஐய்யோ!).

இதன் பிறகும் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், இரண்டாவது கட்டமாக வரும் 14ம் தேதி பெரிய அறுவைசிகிச்சைகளையும் புறக்கணிப்போம்.

அதற்குப் பிறகும் அரசு இறங்கி வராவிட்டால், மூன்றாவது கட்டமாக வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை அவசரசிகிச்சைகளை மட்டுமே வழங்குவோம். சாதாரண நோய்களுடன் வரும் நோயாளிகளை கவனிக்க மாட்டோம். ஊசி கூட போடமாட்டோம். ஊசிபோடா போராட்டம் (Needle down strike) நடத்துவோம்.

இந்தப் போராட்டங்களையும் அரசு மதிக்காமல் நடந்து கொண்டால், வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்ஈடுபடுவோம்.

எங்கள் மீது எஸ்மா சட்டம் பாயும், இரும்புக் கரம் பாயும் என்றெல்லாம் அமைச்சர் செம்மலை மிரட்டியிருக்கிறார். அது குறித்துஎங்களுக்கு எந்த பயமும் இல்லை. இந்த இரும்புக் கரம் எல்லாம் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் மீது பாய வேண்டியவை.

மென்மையான இதயம் கொண்ட நோயாளிகளைக் கவனிக்கும் டாக்டர்களை இரும்புக் கரம் கொண்டெல்லாம் அடக்கவேண்டியதில்லை. அதை தமிழக செய்தால் அதைப் பற்றி கவலையே இல்லை என்றார் பிரகாசம்.

இதனால் வரும் 21ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் முழுவதுமாக ஸ்தம்பிக்கும் நிலைஉருவாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகள் கடுமையாகபாதிக்கப்படுவர்.

குறிப்பாக அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட உள்ளதால் பலரும் உயிரை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

4 மாணவர்கள் மயக்கம்:

இதற்கிடையே தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது.

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் 4 பேர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து இந்தநால்வரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பல் மருத்துவ மாணவர்கள் கைது:

இந் நிலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்ளுக்கு ஆதரவாக இன்று சென்னையில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டஅரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X