For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

289 டன் மெர்க்குரி கழிவு அமெரிக்காவுக்கு "பார்சல்"!

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:

தமிழகத்தில் குவிக்கப்பட்ட அமெரிக்காவின் 280 டன் மெர்க்குரி ரசாயன (பாதரசம்) கழிவு திருப்பி அமெரிக்காவுக்கே அனுப்பப்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் சார்பில் கடந்த 1983ம் ஆண்டுதெர்மாமீட்டர் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்பட்டது. அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆலை தொடங்கப்பட்டத. முழுக்கமுழுக்க அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே இங்கு தெர்மாமீட்டர்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஒன்று கூட இந்தியாவில்விற்கப்படவில்லை.

இதற்காக அமெரிக்காவிலிருந்து மெர்க்குரி (பாதரசம்) கொண்டு வரப்பட்டது. இங்கு தெர்மாமீட்டர்கள் தயாரிக்கப்பட்டு பின்னர் அவைமீண்டும் அமெரிக்காவுக்கே அனுப்பப்பட்டு வந்தன.

கடும் விஷத் தன்மை கொண்ட ரசாயனமான மெர்குரியின் கழிவினால் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். இந்தத்தொழிற்சாலையில் பணியாற்றுவோருக்கு கேன்சர் உள்ள நோய்கள் ஏற்பட்டன.

அமெரிக்காவில் இந்தத் தொழிற்சாலையை நடத்தினால் அந் நாட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் இந்தியா உள்பட மற்ற நாடுகளில்வைத்துத் தான் தெர்மோமீட்டர் தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

Mercury being loaded in the ship

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்பட்ட பாதரசக் கழிவு
(படம் நன்றி- தினகரன்)

போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனம் பேட்டரிகளைத் தயாரித்து வந்தது. இதுவும் அமெரிக்க நிறுவனம் தான். இங்கிருந்து பேட்டரிகள்அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இந்த ஆலையில் இருந்து வெளியான விஷ வாயு தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள்உயிரிழந்தனர். பலர் ஊனமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு யூனியன் கார்பைட் இதுவரை நஷ்ட ஈடு தரவில்லை. அந்த நிறுவனத் தலைவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவரைஇந்தியா தேடிக் கொண்டிருக்கிறது.

இதே போன்ற ஒரு சூழல் கொடைக்கானல் தொழிற்சாலையாலும் ஏற்படலாம் என பல இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்தும் கூடஅமெரிக்காவின் நெருக்குதலால் இந்த ஆலையை அமைக்க இந்தியா அனுமதி தந்தது.

ஆனால், பழனி மலைப் பாதுகாப்பு குழு மற்றும் உள்ளூரைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கடுமையாக போராட்டம் நடத்தின.அவ்வப்போது ஆலையை பொது மக்களே தாக்கினார்கள். இதையடுத்து கடந்த 2001ம் ஆண்டு இந்த தெர்மோ மீட்டர் நிறுவனம்மூடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிறுவனத்தில் தேங்கிக் கிடந்த தெர்மோமீட்டர்கள் மற்றும் மெர்க்குரிக் கழிவுகளை மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பிஅனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கழிவை இந்தியாவிலேயே அழித்துக் கொள்ளுமாறும் அதைதிருப்பிக் கொண்டு செல்ல மாட்டோம் எனவும் அமெரிக்க நிறுவனம் கூறிவந்தது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்தக் கழிவை தமிழகத்தில் எங்கு தேக்கினாலும்அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று தெரியவந்தது. மேலும் அதை சுத்திகரிப்பு செய்யவும் இந்தியாவில் எங்கும் வசதியில்லைஎன்றும் தெரிந்தது.

இதையடுத்து அமெரிக்காவுக்கு மத்திய அரசு மூலம் தமிழகம் நெருக்குதல் தந்தது.

இதைத் தொடர்ந்து அதை உங்கள் செலவில் அனுப்பி வைத்தால், அதை திருப்பி எடுத்துக் கொள்கிறோம் என அமெரிக்க நிறுவனம் கூறியது.இதையடுத்து 289 டன் எடையுள்ள மெர்க்குரிக் கழிவுப் பொருட்கள், தெர்மோமீட்டர்கள் ஆகியவை தூத்துக்குடியிலிருந்து கப்பல் மூலம்அமெரிக்காவுக்கு அனுப்ப்பட்டன.

இந்தக் கழிவுப் பொருட்கள் பென்சில்வேனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து சுத்திகரிக்கப்படும் என்று தெரிகிறது.

மிகச் சாதாரண வெப்ப நிலையிலேயே வாயுவாகிவிடும் மெர்க்குரியை சுவாசித்தால் மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, நரம்பு மண்டலபாதிப்பு, மன நல பாதிப்பு கூட உண்டாகலாம். இந்த வாயுவில் எந்தவிதமான வாசனையும் இருக்காது, நிறமும் இருக்காது. இதனால்,மெர்க்குரியை சுவாசிப்பதைக் கூட நாம் உணர முடியாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X