வேலைக்கார பெண்ணை கற்பழிக்க முயன்று கொலை செய்த மாணவர்
வேலூர்:
வீட்டு வேலைக்காரப் பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்து, அது முடியாமல் போனதால் அப்பெண்ணைக் கொலை செய்தபொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
வேலூரி உள்ள தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்த வருபவர் சுரேஷ் குமார். இவர் நெய்வேலியைச்சேர்ந்தவர். வேலூரில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கி படித்து வருகிறார்.
இந்த வீட்டில் ஜோதி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் வீடு பெருக்குவதற்காக வேலைக்காரப் பெண் ஜோதிவந்தார். அப்போது வீட்டில் சுரேஷ் குமார் மட்டும் தனியாக இருந்தார்.
அதைப் பயன்படுத்தி ஜோதியை அனுபவிக்க நினைத்து அழைத்தார். ஆனால் ஜோதி உடன்படவில்லை. இதையடுத்து அவரைபலாத்காரம் செய்ய முயன்றார். ஜோதி தப்பியோடினார். இதையடுத்து அவரை கழுத்தை நெரித்தார் சுரேஷ்குமார். இதில் ஜோதிமயக்கமடைந்தார்.
இதையடுத்து ஜோதியை மாடியிலிருந்து கீழே தூக்கிப்போட்டு விட்டு ஓடிவிட்டார் சுரேஷ்குமார். இதை யாரும் கவனிக்கவில்லைவீட்டின் பின்புறம், ஜோதி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைப் பார்த்த வீட்டு உரிமையாளர், உடனே போலீஸுக்குத் தகவல்கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து ஜோதியை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அதே பகுதியில் இன்னொரு நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த சுரேஷ்குமாரை போலீஸார் கைது செய்தனர்.


