For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய டாக்டர்கள் தேர்வு தொடங்கியது: உண்ணாவிரதம் இருந்த மாணவரின் உடல் நிலை மோசமானது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் தொடர்வதையடுத்து, மாநிலம் முவதிலும் தற்காலிகமாக புதிய டாக்டர்களைத் தேர்வு செய்யும் பணிதொடங்கியுள்ளது. தினசரி இவர்களுக்கு ரூ. 500 சம்பளம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் 5ம் ஆண்டுஎம்.பி.பி.எஸ். மாணவர் புவனேஸ்வரனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க மாட்டோம் எனஅரசு உறுதியளிக்காத வரை போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என்று அவர் கூறிவிட்டார்.

மேலும் தனக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும் கூறவிட்டார். இதனால் அவர் அரை மயக்கத்தில் உள்ளார். உண்ணாவிரதத்தைக்கைவிடுமாறு அரசு சார்பில் தன்னைச் சந்தித்த துணை தாசில்தாரின் கோரிக்கையையயும் அவர் நிராகரித்துவிட்டார்.

21 நாட்களாக நடந்து வரும் மருத்துவக் கல்லூ மாணவர்களின் போராட்டத்துக்கு ஆததரவாக கடந்த 3 நாட்களாக அரசு டாக்டர்களும்போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 10ம் தேதி முதல் தீவிர அறுவை சிகிச்சைகள் தவிர மற்ற அனைத்து அறுவை சிகிச்சைகளையும்டாக்டர்கள் புறக்கணித்து வருகின்றனர். அதிலும் எல்லா தீவிர அறுவை சிகிச்சைகளையும் செய்ய மறுக்கின்றனர்.

ஸ்தம்பித்தன மருத்துவமனைகள்:

உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் மறுத்ததால் மதுரை மருத்துவமனையில் இளையராஜா என்ற வாலிபர்பலியாகியுள்ளார். மேலும் பல மருத்துவமனைகளிலும் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

டாக்டர்களுடன் பேச்சு நடத்தவும் அரசு தயாராக இல்லை. இதனால், நாளை முதல் அவசர சிகிச்சைக்கான அறுவை சிகிச்சைகள் கூடநிறுத்தப்பட உள்ளன. டாக்டர்களின் இந்த போராட்டத்தால் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

இந் நிலையில் நலத்துறை அமைச்சர் செம்மலையுடன், மருத்துவக் கல்வி இயக்குனர் ரவீந்திரநாத் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத். மாநிலம் முழுவதிலும் தற்காலிக டாக்டர்கள் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சென்னையில்200 டாக்டர்களும், பிற மாவட்டங்களில் தலா 100 டாக்டர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். மொத்தம் 3,000டாக்டர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு தினச ரூ. 500 சம்பளமாக வழங்கப்படும். அறுவைச் சிகிச்சை செய்தால் தினச ரூ.1,000ஊதியம் வழங்கப்படும் என்றார் அவர்.

மேலும், ஓய்வு பெற்ற டாக்டர்கள், படித்து வேலையில்லாமல் உள்ள டாக்டர்களையும் பணியில் சேர்க்க அரசு டிவு செய்துள்ளது.

-அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்:

இந் நிலையில் அரசு டாக்டர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில், டாக்டர்கள் சங்கம் ஆகியவற்றிற்குநோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த உயிரின சுற்றுச்சூழல் கழகம் என்ற அமைப்பு இந்த பொது நல ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில்,மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக அரசு டாக்டர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை ஆய்வு செய்த நீதிபதிகள் தினகர், ஏ.கே.ராஜன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மனுவை விசாரணைக்கு ஏற்றது. தமிழகஅரசு,மருத்துவக் கவுன்சில், டாக்டர்கள் சங்கம் ஆகியவற்ற்கு நோட்டீஸ் அனுப்புமாறும், 20ம் தேதிக்குள் பதிலளிக்குமாறும்உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவ்ைகப்பட்டுள்ளது.

21ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாலிபர் சாவுக்கு கண்டனம்:

இதற்கிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிசிச்சை அளிக்காததால் வாலிபர் இளையராஜா உயிரிழந்ததற்கும் நீதிபதிகள்கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக பத்திரிக்கைகளில் வந்த செய்தியையே வழக்காக எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இது ஒருகொடூரமான சம்பவம். இதற்கு மருத்துவர்கள் தான் நஷ்டஈடு தர வேண்டும்.

Body of Ilayarajaஇது குறித்து ஒரு வாரத்துக்குள் அரசும், டாக்டர்கள் சங்கமும் விளக்கம் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஆனால், உரிய சிகிச்சை கிடைக்காததால் இளையராஜா மரணமடையவில்லை என மருத்துவக் கல்வித்துறை இயக்குனர் ரவீந்திரநாத்கூறியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த இளையரஜாவுக்கு முழு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தலையில் அதிக ரத்தம்வெளியேறியதால் தான் அவர் மரணம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்குத் தயார்: அரசு

இந் நிலையில் மருத்துவ மாணவர்களுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கவும் அரசுதயாராக உள்ளதாகவும் நலத்துறை அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார். எனவே உடனே வகுப்புகளுக்குத் திரும்பி பேச்சுவார்த்தைக்குவருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர்கள் தீவிரம்:

இதற்கிடையே போராட்டம் நடத்தும் மருத்துவர்களுடன் பேச்சு நடத்த அரசு மறுத்து வருகிறது. இன்று இரவுக்குள் எங்களை அழைத்துபேச்சு நடத்தி சுமூகத் தீர்வு கண்டால் போராட்டத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறோம். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என அரசுமருத்துவர்கள் சங்கத் தலைவர் பிரகாசம் அறிவித்துள்ளார்.

தாற்காலிக டாக்டர்கள், புதிய டாக்டர்களை நியமித்து அரசு மருத்துவமனைகனை நடத்தப் போவதாக அரசு கூறி எங்களை அரசு மிரட்டப்பார்க்கிறது. 20 வருடம் வேலை பார்த்த எங்களையே இந்த அரசு வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறது. புதிதாக சேருபவர்கள் தங்களுக்கு என்னநிலை ஏற்படும் என்பதை அவர்களே யோசித்துக் கொள்ள வேண்டும் என்றார் பிரகாசம்.

அரசு டாக்டர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று இரவு நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X