சண்டியரை எதிர்க்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை:
ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் எடுக்கப்படும் சண்டியர் படத்தை திரையிட விடாமல் தடுப்போம் என்று புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மிரட்டியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் சண்டியர். இந்தப் படம் தேவர்- தலித் மோதலை வைத்து உருவாவதாக செய்திகள்வந்துள்ளன. இதையடுத்து படத்துக்கு டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதற்கு முன் கமல்ஹாசன் நடித்து வெளியான தேவர் மகன் படத்திற்குப் பிறகுதான் அரிவாள்கலாச்சாரம் தமிழகத்தில் பெருகிறது. ஜாதி மோதல்கள் அதிகத்தன. இப்போது அதன் இரண்டாம் பாகம் போல சண்டியர் படத்தைஎடுக்கவிருக்கிறார் கமல்.
சண்டியர்த்தனம் செய்வதெல்லாம் அந்தக் காலத்துடன் முடிவடைந்து விட்டது. கமல் எடுக்கும் சண்டியர் படத்தால் ஜாதி மோதல்கள்தான்வரும். எனவே இந்தப் படத்தை இத்தோடு கமல் கைவிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் படத்தைத் திரையிட விட மாட்டோம்,தடுப்போம்.
சட்டசபையில் என்னை ஜாதி வெறியர் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவித்து அடுத்த மாதம் 14ம் தேதிமதுரையில் போராட்டம் நடத்தப்படும் என்றார் கிருஷ்ணசாமி.
சமீபகாலமாக நடிகர் ரஜினியின் ஆதரவாளராக தன்னைக் காட்டி கொண்டு வரும் டாக்டர் கிருஷ்ணசாமி, சமீபத்தில் காவிரிப்பிரச்சினையில், சினிமாக்காரர்கள் அனைவரையும் எதிர்த்துக் கொண்டு ரஜினிகாந்த் தனியாக உண்ணாவிரதம் இருந்தபோது, அவருடன்உண்ணாவிரதம் இருந்தார்.
ரஜினியின் பாபா படம் வெளியானபோது, அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டது.படத்தை ஓட்ட விடாமல் தியேட்டர்களைத் தாக்கியது. கதையும் மோசமாக இருந்ததாலும் காவிரி விவகாரத்தில் ரஜினியின் பெயர்கெட்டதாலும் பா.ம.கவினரின் செயல்களாலும் பாபா மாபெரும் தோல்வியடைந்தது.
பா.ம.க. பாணியில் இப்போது கமலஹாசனை எதிர்த்து களம் இறங்கத் திட்டமிட்டுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications