கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படைகள் திடீர் தாக்குதல்
ஜம்மூ:
கார்கில் பகுதியில் பாகிஸ்தானியப் படைகள் திடீரென இந்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தின. இதையடுத்துஇந்தியப் படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேற்றிரவில் முதல் கனரக துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளால் இந்தியப் படைகள் மீது பாகிஸ்தான் படைகள்சுட்டன. இதையடுத்து இந்தியப் படைகள் அதைவிட அதிக அளவில் பதிலுக்கு குண்டுமழை பொழிந்துவருகின்றன.
இத் தாக்குதல் இன்று பிற்பகல் வரை நீடித்துக் கொண்டிருப்பதாக கார்கிலில் இருந்து வரும் தகவல்கள்தெரிவிக்கின்றன.
இரு ஆண்டுகளுக்கு முன் கார்கிலுக்குள் பாகிஸ்தானியப் படைகளும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவின.இதையடுத்து மிக பலத்தத் தாக்குதல் நடத்தி இந்தியா இந்தப் பகுதியை மீட்டது நினைவுகூறத்தக்கது.
இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடிவு செய்துள்ள நிலையில் இத் தாக்குதல் நடந்துள்ளது.பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தானிய ராணுவம் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவில் மோதல் தவிர்ப்பு:
இதற்கிடைடே, ஐ.நா. சபையில் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கிளப்பின. ஆனால்,கடந்த பல ஆண்டுகளில் முதன்முறையாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொள்ளவில்லை.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் பேசிய இந்தியத் தூதர் விஜய் நம்பியார், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும்கருத்து வேறுபாடுகளை பேசித் தான் தீர்க்க வேண்டும். அதே நேரத்தில் மறைமுகமானத் தாக்குதல்கள், எல்லைதாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றை நிறுத்தினால் தான் பேச்சுவார்த்தையே சாத்தியமாகும்.
எந்த நாடுமே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொண்டால் தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும். காஷ்மீரில் ஐ.நா. நேரடிக் கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது என்றார்.
அதே நேரத்தில் பாகிஸ்தானை அவர் தாக்கி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
அதே போல பாகிஸ்தான் தூதர் பேசும்போதும், இந்தியாவைத் தாக்கி ஏதும் பேசவில்லை. அதே நேரத்தில் காஷ்மீர்மக்களின் மனப்பான்மையை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ப பேச்சு நடத்த முன் வர வேண்டும் என்றார்.


