For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10,000 டாக்டர்கள் ஸ்டிரைக்: செயலிழந்த அரசு மருத்துவமனைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் அரசு டாக்டர்கள் இன்று ஒரு நாள் அடையாள முழு வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். 90 சதவீதடாக்டர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் ஸ்தம்பித்துப்போயின.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தரக் கூடாது என்று வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவர்கள்போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அரசு டாக்டர்களும் போராட்டத்தில்குதித்துள்ளார்கள்.

முதலில் பெரிய அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் புறக்கணித்தனர். அவசர சிகிச்சைகளை மட்டுமேசெய்வோம் என்று கூறினர். ஆனால், அதையும் கூட செய்யவில்லை. இதனால் மதுரையில் விபத்தில் காயமடைந்தஅப்பாவி வாலிபர் உயிரிழந்தார்.

இதையடுத்து ஊசி போடா போராட்டம் நடத்தப்பட்டது. மருத்துவமனைகளுக்கு வந்த யாருக்கும் எந்தசிகிச்சையும் அளிக்க டாக்டர்கள் மறுத்தனர். இந் நிலையில் இன்று ஒரு நாள் முழு வேலை நிறுத்தத்தில் டாக்டர்கள்ஈடுபட்டனர்.

சுமார் 10,000 அரசு டாக்டர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் மாநிலம் முழுவதும அரசுமருத்துவமனைகளில் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

சில மருத்துவமனைகளில் தலைமை சர்ஜன்கள் பணிக்கு வந்தாலும் கூட அவர்களால் அனைத்து நேயாளிகளுக்கும்சிகிச்சை தர முடியவில்லை. மிக அவசரமான கேஸ்களை மட்டுமே அவர்கள் கவனித்தனர்.

நோயாளிகள் வரவில்லை:

ஏற்கனவே போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் கூட்டம் வருவது பெருமளவுகுறைந்துவிட்டது. இன்றைய போராட்டம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் அரசு மருத்துவமனைக்குபெரும்பாலான நோயாளிகள் வரவேயில்லை.

நர்ஸ்கள் சிகிச்சை:

இதனால் புற நோயாளிகள் பிரிவுகள் காலியாகவே காணப்பட்டன. ஆனால், அவசர சிகிச்சைகளுக்காக வந்தநோயாளிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதே போல உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தவர்களுக்கு நர்ஸ்கள் தான் சிகிச்சை தந்தனர். அவர்களைக் கவனிக்க டாக்டர்கள் இல்லை.

50 சதவீத டாக்டர்கள் வந்தனர்: அரசு

அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை அளிக்க தனியார் டாக்டர்களும் ஓய்வு பெற்ற டாக்டர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 50 சதவீத டாக்டர்கள் பணிக்கு வந்துவிட்டதாகவும்,தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 40 சதவீத டாக்டர்கள் பணிக்கு வந்ததாகவும் தமிழக மருத்துவக் கல்வித்துறைஇயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் கூறினார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் வழக்கம்போல் இயங்குகின்றன என்றார்.

அதே போல சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நிருபர்களிடம் பேசுகையில், 37 மூத்த மருத்துவர்கள்இங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இங்கு பணிகள் ஏதும் பாதிக்கப்படவில்லை என்றார்.

யார் பொறுப்பு?

அரசு இவ்வாறு சொன்னாலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் டாக்டர்களைப் பார்க்க முடியவில்லை.

ஆனால், மாநிலம் முழுவதும் 10,000 அரசு டாக்டர்களும் பணியைப் புறக்கணித்துவிட்டதாக டாக்டர்கள் சங்கத்தலைவர் டாக்டர் பிரகாசம் தெரிவித்தார். அவர் கூறுகையில், சில மருத்துவமனைகளில் தற்காலிகமாகநியமிக்கப்பட்ட தினக்கூலி டாக்டர்கள் சிலர் ரூ. 1,000த்தை வாங்கிக் கொண்டு அறுவைச் சிகிச்சைகள்செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை நாளை நாங்கள் தான் கவனிக்க வேண்டும், நிச்சயம் கவனிப்போம்.அது எங்கள் கடமை.

ஆனால், இந்த நோயாளிகளுக்கு ஏற்படும் மருத்துவப் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.இந்த தாற்காலிக டாக்டர்களும் அரசும் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அமைச்சர் சொன்ன கதை:

இந் நிலையில் சென்னையில் உள்ள பொது அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவமனைஆகியவற்றுக்கு நலத்துறை அமைச்சர் செம்மலை நேரில் சென்று நிலைமையப் பார்வையிட்டார்.

அப்போது நிருபர்களுடன் பேசிய அவர். தாற்காலிக டாக்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு எந்தவித தடங்கலும் இல்லாமல் (??!!)சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பணிக்கு வரும் டாக்டர்கள், தற்காலிக டாக்டர்களை மருத்துவர் சங்கநிர்வாகிகள் சில பேர் மிரட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.அவர்கள் மீது கடும் நிடவடிக்கை எடுக்கப்படும்.

மனிதாபிமானம் உள்ள பல டாக்டர்கள் பணிக்கு வந்துள்ளதால், அரசு மருத்துவமனைகளில் எந்தவிதப்பிரச்சினையும் இல்லை என்றார்

பேச்சுவார்த்தைக்கு வருமாறும் மருத்துவ மாணவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால், அரசு மருத்துவர்களைஅவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மீது எஸ்மா சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுஎச்சரித்துள்ளது. ஆனால், எஸ்மா சட்டம் பாய்ந்தாலும் திட்டமிட்டபடி இன்றும், 21ம் தேதி முதல்காலவரையரையின்றியும் ஸ்டிரைக் நடைபெறும் என்று தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் கூறியுள்ளது.

சம்பளம் கட்:

இன்று வேலைக்கு வராத டாக்டர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய சுகாதாரத் துறைமுடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X