சென்னையில் குளுமை!
சென்னை:
சென்னையில் தற்போது குளுகுளு வானிலை நிலவி வருகிறது. மழை இல்லாவிட்டாலும் கூட, மேகமூட்டத்துடனேயே வானம் இருந்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு இதே போன்ற கால நிலை நீடிக்கும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு புயல் அபாயம் வந்தது. ஆனால் புயல் வேறு பக்கம் போய் விட்டது. புயல் காரணமாக கன மழைபெய்யும் என்று கூறப்பட்டது. ஆனால் லேசான மழையோடு நின்று விட்டது.
புயலால் ஏற்பட்ட மேக மூட்டமும் கலைந்து மெட்ராஸ் வெயில் அடித்தது. ஆனால், நேற்று முதல் மீண்டும் மேகம்மூட்டம் நிலவுகிறது. இதனால் புழுக்கம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக உள்ளனர்.
இந்த மப்பும் மந்தாரமான சூழ்நிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெப்ப நிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸுக்குள்ளாகவே இருக்கும் என்றும்தெவித்துள்ளனர்.


