For Quick Alerts
For Daily Alerts
Just In
மயூரணி கொலை வழக்கு: சோலைமலைத் தேவருக்கு ஜாமீன் மறுப்பு
மதுரை:
இலங்கை மாணவி மயூரணி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சோலைமலைத் தேவர்உள்ளிட்ட4 பேருடைய ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இலங்கையைச் சேர்ந்த மயூரணி என்ற மாணவி, மதுரையில் படித்து வந்தார். அவர் படித்து வந்தஅம்பிகா கல்லூரி உரிமையாளர் சோலைமலைத் தேவரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் மயூரணி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுதொடர்பாக சோலைமலைத் தேவர், அவரது மனைவி ராக்கம்மாள், மாணவர் பால பிரசன்னா,அவரது நண்பர் ஹாஜி அலி, வாட்ச்மேன் வீரண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தங்களை ஜாமீனில் விடுமாறு பாலபிரசன்னாவைத் தவிர மற்ற 4 பேரும் மனு செய்தனர்.
ஆனால் அவர்களது ஜாமீன் மனுக்களை விடுமுறை கால நீதிபதி உதயன் நிராகரித்துவிட்டார்.


