For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ் டூ முடிவுகள்: 75 சதவீதம் பேர் தேர்ச்சி-- முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில் 75.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த இரு ஆண்டுகளைவிட 9 சதவீதம் குறைவானதாகும்.

இந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களில் 70.60 சதவீதம் பேரும், மாணவிகளில் 79.80 சதவீதத்தினரும் வெற்றிபெற்றுள்ளனர். இதனால் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் (9.20 சதவீதம்அதிகம்) வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 6 ஆணடுகளாக மாணவர்களை விட மாணவிகளே தொடர்ந்து அதிகஅளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு மாநிலத்திலேயே முதல் மூன்று இடங்களை மாணவர்களே பிடித்துமாணவிகளை ஓவர்டேக் செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் டூ தேர்வை 5,03,558 மாணவ, மாணவியர்கள் எழுதினர்.

இதில் 1,200க்கு 1,181 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவராக பாளையங்கோட்டை சேர்ந்தஎன்.எஸ். ராம சுப்பிரமணியம் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அந்த நகரில் உள்ள ரோஸ் மேரி மெட்ரிகுலேஷன்பள்ளியில் படித்தவர். தமிழையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர் இவர்.

தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள எஸ்.வி.மந்திர் பள்ளியைச் சேர்ந்த சுரேஷ் மாநிலத்திலேயேஇரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 1,178 மதிப்பெண்கள் பெற்றார்.

சிவகங்கை செயிண்ட் ஜான் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராஜா 1,177 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயேமூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.வழக்கத்துக்கு மாறாக முதல் மூன்று இடங்களை மாணவர்களே பிடித்துள்ளனர்.

தமிழ் தவிர சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளை பாடமாக எடுத்துப் படித்தவர்களில்சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவி கல்லூரி பாரதி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர்1,200க்கு 1,188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்தப் பிரிவில் மாநிலத்திலேயே 3வது இடத்தையும் (1,185மதிப்பெண்கள்) இதே பள்ளி மாணவர் சுதர்ஷன் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை (1,887 மதிப்பெண்கள்)பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் மாணவி பிடித்துள்ளார்.

ஆனால், ஒட்டுமொத்தமாக பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி விகிதம் திடீரென 9 சதவீதம் சரிந்துள்ளது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தேர்வெழுதியவர்களில் 25 சதவீத மாணவர்கள் தேர்வில்தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இந்த ஆண்டு 1,150 பேர் இயற்பியலிலும், 1,250 பேர் வேதியலிலும், 226 பேர் உயிரியலிலும்,630 பேர் கணிதத்திலும், 6 பேர் கம்ப்யூட்டர் அறிவியலிலும், வ 705 பேர் வணிகவியலிலும்நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதத்தில் 2,965 பேர் நூற்றுக்கு நூறுமதிப்பெண்கள் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வெழுதிய மாணவர்கள் வரும் 23, 24ம் தேதிகளில் தங்களது மதிப்பெண் பட்டியல்களை தாங்கள் படித்தபள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்குனர் பழனிவேலு தெரிவித்தார். அவர் கூறுகையில்,தேர்ச்சி விகிதம் திடீரென 9 சதவீதம் சரிந்தது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இதற்கான காரணம்கண்டறியப்பட்டு அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக போலியான மதிப்பெண் பட்டியல்களை சில சமூக விரோதக் கும்பல்கள் தயாரித்து விற்றுவருகின்றன. அதைத் தடுக்க இந்த ஆண்டு முதல் மதிப்பெண் பட்டியல்களில் 4 ரகசிய குறியீடுகள் இருக்கும்.மேலும் அந்தத்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கையெழுத்தும் சீலும் இருக்கும்.

பள்ளிகள் மூலம் தேர்வெழுதியவர்கள் அந்ததந்தப் பள்ளிகளிலும் தனியாகத் தேர்வு எழுதியவர்கள் தாங்கள்எழுதிய மையத்திலும் மதிப்பெண் பட்டியல்களை வாங்கிக் கொள்ளலாம். தேர்வில் தோல்வியடைந்தவர்கள்உடனடியாக மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேயே கல்லூரிகளில் சேர்ந்துப் பயில நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

தோல்வியடைந்த மாணவ, மாணவியர்களுக்கு வரும் ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை மறுதேர்வுகள் நடத்தப்படும். இதனால் ஓராண்டை மாணவர்கள் வீணடிக்க வேண்டியதில்லை.

இது தவிர மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு ஒரு மார்க்கூடினாலும் கூட புதிதாக மதிப்பெண் பட்டியல் தரப்படும்.

இந்த ஆண்டு முதல் இயற்பியல், வேதியல், கணிதம் தவிர உயிரியல் விடைத் தாளின் நகலையும் கூடமாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகல் பெற விரும்பும் மாணவர்கள் அதற்கானகட்டணத்தைக் கட்டிப் பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இந்த மாதம் 31ம் தேதி வெளியிடப்படும் என்றார் பழனிவேலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X