ராஜ்கிரண் மீது 2 வாரத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்
பாண்டிச்சேரி:
நடிகர்- இயக்குனர் ராஜ்கிரண் மீதான பண மோசடி வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்படவுள்ளதாக பாண்டிச்சேரி போலீஸார் அறிவித்துள்ளனர்.
நடிகர் ராஜ்கிரணும், அவரது இரண்டாவது மனைவி பத்மஜோதியும் சேர்ந்து பாண்டிச்சேரியைச் சேர்ந்தபாலசுப்பிரமணியம் என்பவருக்கு பெட்ரோல் பங்க் வைக்க அனுமதி வாங்கித் தருவதாக கூறி ரூ. 3.5 லட்சம் பணம்வாங்கி மோசடி செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை ராஜ்கிரணுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்ஆஜராகவில்லை. இந் நிலையில் ராஜ்கிரண் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
இன்னும் 2 வாரத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என பாண்டிச்சேரி வடக்கு காவல்துறைக்கண்காணிப்பாளர் சந்திரன் தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் ராஜ்கிரண் மீதான மோசடி விசாரணைதொடங்கும்.


