தலைநகரை பின் தள்ளிய மாவட்டங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வழக்கம் போல இந்த ஆண்டும் சென்னை நகர மாணவ, மாணவியரை விட மற்ற மாவட்ட மாணவ,மாணவிகள்தான் முதலிடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
![]() |
மாநிலத்தில் முதலிடம் பிடித்த பாளையங்கோட்டை ராமசுப்பிரமணியம் |
பாடவாரியாக சாதனை மாணவ, மாணவியர் பட்டியல்:
- தமிழ்: முதல் 3 இடங்களையும் முறையே தூத்துக்குடி (ஐஸ்வர்யா), மயிலாடுதுறை (திவ்யா), தூத்துக்குடி (துர்காபிரியா) மாணவிகள் பெற்றுள்ளனர்.
- சிறப்புத் தமிழ்: முதல் இரண்டு இடங்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (முத்தமிழ், நர்மதா தேவி), 3-வது இடம் கோட்யூைர் (ஆனந்தி).
- ஆங்கிலம்: முதல் 3 இடங்களையும் காஞ்சிபுரம் (சுதாகர்), பாண்டிச்சேரி (சந்தியா), கும்பகோணம் (பானுப்பிரியா) மாணவ, மாணவியரே பெற்றுள்ளனர்.
- இயற்பியல்: இதிலும் வெளி மாவட்டத்திற்கு முதல் 3 இடங்களும். பாளையங்கோட்டை(அஸ்வினி), மதுரை (சதீஷ் கிருஷ்ணா), ஈரோடு (மதனகோபால்), ராசிபுரம் (சுகன்யா) ஆகிய ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.
- வேதியியல்: இதிலும் பாளையங்கோட்டை (அஸ்வினி), மதுரை (சதீஷ் கிருஷ்ணா), ஈரோடு (மதனகோபால்), ராசிபுரம் (சுகன்யா) மாணவ, மாணவியரே முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
- தாவரவியல்: முதலிடம் நாகர்கோவிலுக்கு (ரெங்கசினி). 2-வது மற்றும் 3வது இடத்தை சென்னை மாணவிகள் (வினிதா, நேஹா தங்கிரில்லா) பெற்றுள்ளனர்.
- விலங்கியல்: இதில் முதலிடம் சென்னைக்கு (வினிதா). 2-வது மற்றும் 3-வது இடம் முறையே நாகர்கோவில் (திவ்யா), சிவகங்கைக்குக்கு (ஜவஜோதி) கிடைத்துள்ளது.
- உயிரியல்: இதில் முதல் 3 இடமும் முறையே பாளையங்கோட்டை (அஸ்வினி), மதுரை (சதீஷ் கிருஷ்ணா), ராசிபுரத்திற்குக் (சுகன்யா) கிடைத்துள்ளது.
- கணிதம்: இதிலும் முதல் 3 இடத்தை பாளையங்கோட்டை (அஸ்வினி), மதுரை (சதீஷ் கிருஷ்ணா), ஈரோடு (மதனகோபால்), ராசிபுரம் (சுகன்யா) மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர். புள்ளியியல்: முதல் இரண்டு இடங்கள் ஈரோட்டிற்கு (மதனகோபால், நவீன்) மூன்றாவது இடம் சென்னைக்குக் (ஆர்த்தி) கிடைத்துள்ளது.
- கம்ப்யூட்டர் அறிவியல்: முதலிடம் ஓசூருக்கு (சிவசங்கர்), 2 மற்றும் 3-வது இடம் சென்னைக்கு (விவேகானந்தன், தீப்தி).
- ஹோம் சயின்ஸ்: 3 இடம் வெளியூருக்கு. முதல் இரண்டு இடம் மதர்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு (சிவா, ஸ்ரீஷா), மூன்றாவது இடம் சேலம் மாணவி கனகவல்லிக்கு.
- வரலாறு: முதலிடம் சென்னை மாணவி ரேணுகா தேவிக்கு. இரண்டாவது இடம் திருச்சுழி மாணவர் வேலுச்சாமிக்கு. 3-வது இடம் திருவிடைமருதூர் சிவகாம சுந்தரி.
- பொருளாதாரம்: முதல் மூன்று இடமும் சென்னைக்கு (ஸ்னேஹா ஜான், சுஜாதா, செளம்யா). தத்துவவியல்: மூன்று இடமும் சென்னைக்கு (நந்தகுமார், முருகன், சரவணன்).
- சமூகவியல்: முதல் இரண்டு இடம் திண்டுக்கல்லுக்கு (காமாட்சி, குழந்தை தர்சி), 3-வது இடம் கொல்லங்கோடுக்கு ( லிஸிராஜ்).
- வர்த்தகம்: முதலிடம் ஓசூர் (சிவசங்கர்), 2-வது இடம் ஈரோடு (பிரபு), 3-வது இடம் வேலாண்டிப்பாளையம் (ரம்யா).
- லாஜிக்ஸ்: முதலிடம் காந்திகிராமம் (வடிவேலு), இரண்டாவது இடம் அறுமனை (ஆல்பர்ட் அலெக்ஸ்), 3-வது இடம் செந்தமிழ்ச் செல்வன் (மதுரை).
- உளவியல்: முதல் 3 இடம் சென்னைக்கு (அசோக்குமார், பவானி ஈஸ்வரி, அஸ்ராதா கேசவ்).
![]() |
2வது இடம் பெற்ற ஊத்தங்கரை சுரேஷ் |














Click it and Unblock the Notifications