மலேசியாவில் காணாமல் போன பெண் திருப்பத்தூரில் கண்டுபிடிப்பு
சிவகங்கை:
மலேசியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட இளம் பெண், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருப்பதுதெரிய வந்துள்ளது.
மலேசியாவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மகள் பூங்காவனம் (21). இவரை மே மாதம் 3ம்தேதியிலிருந்து காணவில்லை. அதேசமயத்தில் ராஜேந்திரனிடம் வேலை பார்த்து வந்த கேசவன் (26)என்பவரையும் காணவில்லை.
இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.
கேசவன்தான் தனது மகளை அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து தூதரக அதிகாரிகள் தமிழக போலீசாருக்கு தகவல் தந்தனர். கேசவனின் சொந்த ஊரான சிவகங்கைமாவட்டம் திருப்பத்தூருக்கு அருகே உள்ள கண்ணமங்களப்பட்டி என்ற கிராமத்திற்கு, திருப்பத்தூர் அனைத்துமகளிர் காவல் நிலைய பெண் போலீஸார் விரைந்தனர்.
அங்கு பூங்காவனம் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது சொந்த விருப்பத்தின் பேரில்தான்இங்கு வந்ததாகவும், கேசவன் கடத்தி வரவில்லை என்றும் இந்தியாவை சுற்றிப் பார்க்கவே இங்குவந்துள்ளதாகவும் பூங்காவனம் தெரிவித்துள்ளார்.
இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணத்துக்கு ராஜேந்திரன் தடையாக இருந்ததால் இருவரும் மலேசியாவில்இருந்து ஓடி வந்துவிட்டதாகத் தெரிகிறது. இருவருமே மேஜர் என்பதால் இதில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைஉள்ளது.
ஆனால், டூரிஸ்ட் விசாவில் பூங்காவனம் வந்துள்ளதால், விசா காலாவதியானவுடன் எப்படியும் அவர் திரும்பிப்போய் தான் ஆக வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.


