For Daily Alerts
Just In
ரூ. 10 கோடி ஹெராயின் சிக்கியது: 2 பேர் கைது
ஈரோடு:
ஈரோட்டில் ரூ. 10.4 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. இதைக் கடத்திய 2 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு, கோலம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதரன் என்பவரது வீட்டில் ஹெராயின் போதைப் பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய போதைப் பொருள் தடுப்புப்போலீஸர் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது 10.4 கிலோ எடையுள்ள ரூ. 10.4 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது. மேலும்பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க, இலங்கை கரன்சி நோட்டுக்களும் பிடிபட்டன.
இதுதொடர்பாக ஸ்ரீதரன், அவரது நண்பர் யாசர் அராபத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இருவரும் மத்திய பிரதேசத்திலிருந்து போதைப் பொருளை வாங்கி, தமிழ்நாடு வழியாக அதை இலங்கைக்குக்கடத்தி வந்துள்ளனர்.


