மார்க் குறைந்ததா?: மறு கூட்டல் விண்ணப்பங்கள் தயார்...
சென்னை:
பிளஸ் டூ தேர்வில் தாங்கள் நன்றாகத் தேர்வெழுதியும் குறைவான மதிப்பெண்களே வந்துள்ளதாக சந்தேகப்படும்மாணவ, மாணவிகள் மறு கூட்டல் (Retotal) கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் இலவசமாகவழங்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்திலும் மாவட்டக் கல்வி அலுவலகங்களிலும் இந்தவிண்ணப்பங்கள் தரப்படுகின்றன.
மறு கூட்டல் செய்ய ஒரு பாடத்துக்கு ரூ. 130மும், மொழிப் பாடத்தில் மறு கூட்டல் செய்ய ரூ. 250ம் கட்டணமாகசெலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணத்தை டி.டி. மூலம் செலுத்தலாம். இயக்குனர், அரசுப் பள்ளித் தேர்வுத்துறை, சென்னை என்றபெயரில் இந்த டி.டியை எடுத்து விண்ணப்பதுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை தபால் அல்லது கொரியரில் அனுப்பக் கூடாது. இதற்காக சென்னை அரசுத் தேர்வுத்துறைஇயக்குனர் அலுவலகத்திலும் மாவட்டக் கல்வித்துறை அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடவேண்டும்.
மறுதேர்வு:
இதே போல பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் உடனே மறு தேர்வு எழுத வரும் 26ம் தேதி முதல்31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த மறு தேர்வுகள் அடுத்த மாதம் 25ம் தேதி முதல் நடக்கவுள்ளன.
ஒரு பாடத்தை மறு தேர்வு எழுத ரூ. 85ம், இரு பாடங்களுக்கு ரூ. 135ம், மூன்று பாடங்களுக்கு ரூ. 185ம்கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


