இலங்கை வெள்ளம்: இந்திய ராணுவமும் விரைந்தது
கொழும்பு:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மத்திய மற்றும் தென் கிழக்கு இலங்கை மக்களுக்கு உதவவும் மீட்புப்பணிகளில் ஈடுபடவும் இந்திய ராணுவம் களமிறங்கியுள்ளது. முன்னதாக இந்தியக் கடற்படையும் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.
இந் நிலையில் இன்று இந்திய ராணுவத்தின் ஐ.எல்-76 ரக சரக்கு விமானங்கள் மருத்துப் பொருள்கள் மற்றும் மீட்புக்கருவிகளுடன் இன்று கொழும்புவுக்கு அனுப்பப்பட்டன. அத்துடன் 150 ராணுவ வீரர்களும்அனுப்பப்பட்டுள்ளனர்.
தேவைப்பட்டால் இந்திய ராணுவ ஹெலிகாப்டர்களும் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரு மழை பெய்ததால் தென் மத்திய இலங்கையே நீரில் மூழ்கிப்போயுள்ளது. இதையடுத்து இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய கடற்படைக் கப்பல்களும் படகுகளும்மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்திய ராணுவத்தின் அவசர பாலங்கள் அமைக்கும் இன்ஜினியரிங் பிரிவினர் செகந்திராபாத் மற்றும்அலகாபாத்தில் இருந்து இலங்கை விரைந்துள்ளனர். அதே போல ராணுவ மருத்துவக் குழுவினரும்அனுப்பப்பட்டுள்ளனர்.


