கோ.சி.மணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரெய்ட்
தஞ்சாவூர்:
திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணிக்கு சொந்தமான வீடுகள், மகன் வீடு, உறவினர் வீடுகளில் இன்று காலைமுதல் லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரெய்ட் நடத்திக் கொண்டுள்ளனர். நேற்று இன்னொரு முன்னாள் அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் ரெய்ட் நடந்தது.
திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் கோ.சி. மணி.
அப்போது மாநிலம் முழுவதும் குடிநீர்க் குழாய்கள் பதித்ததில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகத் தெரிகிறது.இது தொடர்பாக ஏற்கனவே கோ.சி. மணியின் வீடுகள், அவர்களது உறவினர்களின் வீடுகளில் சோதனைகள்நடத்தப்பட்டன.
இப்போது மீண்டும் ரெய்ட் நடக்கிறது. கோ.சி. மணி அமைச்சராக இருந்தபோது நகராட்சி நிர்வாகத்துறைசெயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயர் மீதும் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் பார்வைவிழுந்துள்ளது. அவரிடமும் சமீபத்தில் போலீசார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மிக மூத்த அதிகாரியான சாந்தஷீலா நாயரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதற்கு தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் தான் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் இருக்கும் கோ.சி.மணியின்வீடுகள், நாகப்பட்டிணம் மேக்கிரிமங்கலத்தில் உள்ள அவரது வீடு, இந்தப் பகுதிகளில் உள்ள அவரதுஉறவினர்களின் வீடுகளிலும் ரெய்ட் நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸ் படைகாலை 8 மணி முதல் இச் சோதனைகளை நடத்தி வருகிறது.
அதே போல குத்தாலம் அருகே உள்ள மேல்திமங்கலத்தில் உள்ள மணியின் வீடு, கும்பகோணம் புதுநகர் பகுதியில்உள்ள மகன் மதியழகனின் வீடு, கும்பகோணத்தில் உள்ள 2 உறவினர்களின் வீடுகளிலும் சோதனைநடத்தப்பட்டது.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வீட்டில்:
இந் நிலையில் திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரெய்ட் நடத்தினர்.
தற்போது எம்.எல்.ஏவாக உள்ள பன்னீர்செல்வம் பலமுறை முதல்வர் ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்தில்மோதினார். இதையடுத்து அவர் வீட்டில் பலமுறை ரெய்ட் நடந்துள்ளது. இந் நிலையில் காட்டுமன்னார் கோவிலில்உள்ள இவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரும் பொதுப் பணித்துறை அதிகாரிகளும் ரெய்ட் நடத்தி அந்தவீடுகளின் மதிப்பை ஆராய்ந்துவிட்டுச் சென்றுள்ளனர்.


