For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி பின்னணியுடன் காய் நகர்த்தும் ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளருமான ப.சிதம்பரம் சமீப காலமாக திமுக, அதிமுகவுக்கு மாற்றாக காங்கிரஸ்தலைமையில் 3 வது அணி அமைக்க வேண்டும் என்று சொல்வதற்கு பலமான பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது.

மூப்பனான் வலது கரமாக திகழ்ந்தவர் ப.சிதம்பரம். அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் மெளன குரு நரசிம்மராவ்,ஜெயலலிதாவுடன் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைக்க முடிவெடுத்ததால், அதை எதிர்த்து மூப்பனாருடன்சேர்ந்து காங்கிரஸிலிருந்து விலகியவர் சிதம்பரம்.

மூப்பனாருக்கு கட்சிப் பெயர் வைத்தது, தேர்தல் கமிஷனில் பதிவு செய்தது, திமுகவுடன் கூட்டணி கண்டது,ரஜினியின் ஆதரவைப் பெற்றுத் தந்தது எல்லாமே சிதம்பரம் தான்.

மூப்பனாரின் கடைசிக் காலத்தில் ப.சிதம்பரத்திற்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கும்அதிமுகதான் காரணமாக இருந்தது. இறுதியில் மூப்பனாரை விட்டுப் பிரிந்து தனி இயக்கம் கண்டார் ப.சிதம்பரம்.

பின்னர் திமுகவுடன்கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றியும் கிடைத்தது.

இந் நிலையில் அவரை மீண்டும் காங்கிரசுக்கு இழுக்க சோனி காந்தி முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால், பிடிஏதும் கொடுக்காமல் சிதம்பரம் விலகிக் கொண்டுவிட்டார். காங்கிரசுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்கத்தயாராக இருப்பதாக மட்டும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் சமீப காலமாக திமுக எதிர்ப்புப் போக்கையும் ப.சிதம்பரம் கடைப்பிடித்து வருகிறார்.

சிதம்பரத்தின் இந்த வேகத்திற்கு முக்கியக் காரணம் நடிகர் ரஜினிகாந்த் தான் என காங்கிரஸ் தலைகள் கூறுகின்றன.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை பரீட்சித்துப் பார்க்க ரஜினி முடிவு செய்துள்ளதாககூறப்படுகிறது. அந்தத் தேர்தலில் சிதம்பரத்தை முன்னிருத்தி தனது செல்வாக்கை ஆணித்தரமாக நிரூபிப்பதன்மூலம் அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவை பதவியிலிருந்து அகற்ற முழுமையாக இறங்கவும்ரஜினி முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ரஜினியின் ஆதரவு இருக்காது என்று என்று கூறப்படுகிறது.அதற்குள் மூன்றாவது அணி அமைக்கும் பணியை ப.சிதம்பரம் நடத்திக் காட்டிவிடுவார் என்கிறார்கள்.

இனிமேலும் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலைஇருக்கக் கூடாது என்று ரஜினி கருதுவதாகத் தெரிகிறது. தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையாமல்போய்விட்டதாகக் கருதும் ரஜினி, இதற்கு இந்த இரண்டு கட்சிகளும்தான் முக்கியக் காரணம் என்றும் கருதுகிறார்.

சிதம்பரத்தை முன்னிருத்தி இன்னொரு அணியை உருவாக்கி அதற்கு முழுமையாகப் பின்னணியில் இருக்கப்போகிறார் ரஜினி. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் முக்கிய அங்கம் பெற வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளார்ரஜினி.

தமிழக காங். தலைவராகும் ஜெயந்தி:

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவியேற்க சிதம்பரம் மறுத்துவிட்டதால் ஜெயந்தி நடராஜனை அப் பதவியில்அமர்த்த சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஜெயலலிதாவை எதிர்க்க ஒரு பெண்ணை முன்னிறுத்தினால் அது எடுபடும் என சோனியா நினைப்பதாகத்தகவல்கள் வருகின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் ஜெயந்தி நடராஜன் இந்தப் பதவியில் அமர்த்தப்படுவார் எனடெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X