For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவின் தென் மாவட்டத் தேர்தல்கள் ஒத்திவைப்பு: தண்ணீராய் புழங்கும் பணம்...

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தா.கிருட்டிணன் கொல்லப்பட்டதையடுத்து மதுரைப் பகுதியில் திமுக கட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுகவின் 12-வது பொதுத் தேர்தலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மதுரை மாநகர வட்டக் கழகங்களின்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மற்றும் மதுரைப் புரநகர் மாவட்ட பேரூர், ஒன்றிய, நகரக் கழகத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 21ம் தேதி நடை பெறுவதாக இருந்தது.

அதுபோல, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான ஒன்றிய, நகரக் கழகத் தேர்தல்கள் 22-ம்தேதியும் , தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கான ஒன்றிய , நகரக் கழகத் தேர்தல்கள் 23ம் தேதியும்நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரை பகுதிக் கழகத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 23ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேர்தல்கள் அனைத்தும் தற்போது ஒத்திவைக்கப்படுகின்றன.இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்என்று கூறப்பட்டுள்ளது.

லட்சங்களை அள்ளிவிடும் திமுகவினர்:

திமுகவில் முக்கியப் பதவிகளைப் பிடிக்க அக் கட்சியினர் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வருகின்றனர்.ஒன்றியச் செயலாளர் பதவியைப் பிடிக்கவே ரூ. 20 லட்சம் வரை செலவிடுகின்றனர். பணத்தின் மூலம்நிர்வாகிகளின் ஓட்டுக்களை வளைக்க பெரும் மோதலே நடந்து வருகிறது.

போட்டியிடுவோர் அனைவருமே பணத்தை தண்ணீராக செலவு செய்யும் அளவுக்கு வலுவானவர்களாகஇருப்பதால் கடைசியில் ஆள் பலம், அடிதடிக்கு இறங்குகின்றனர். பல இடங்களில் வாக்களிக்கும் தகுதி கொண்டகட்சி நிர்வாகிகளை கடத்திச் செல்வதும் நடந்து வருகிறது.

மோதல் முற்றி பலர் அண்ணா அறிவாலயத்துக்கே தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து மூத்த தலைவர்களின்ஆதரவைப் பெறவும் முயல்கின்றனர். தலைவர்களால் உதவப்பட்ட நபரின் எதிர் தரப்பினர் தங்கள் ஆட்களுடன்வந்து மூத்த தலைவர்களுடன் மோதுகின்றனர். கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டுப் போகின்றனர்.

இதனால் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தினமும் களேபரக் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்:

ஸ்டாலினுக்கு வலது கரமாகத் திகழும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டத் தலைவர்பதவிக்கு போட்டியிடுகிறார். ஆனால், இதை அழகிரி தீவிரமாக எதிர்க்கிறார். ஸ்டாலின் தீவிர ஆதரவாளராகஇருந்த த.கிருட்டிணனை போட்டுத் தள்ளிவிட்டதால் இப்போது ராமச்சந்திரன் அதிகமான பாதுகாப்போடு வலம்வர ஆரம்பித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X