அநியாய கட்டணம்: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
ஈரோடு:
தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் ரூ. 25,000க்கு மேல் கட்டணம் வசூலித்தால், கல்லூரிநிர்வாகிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தர் பாலகுருசாமி எச்சரித்துள்ளார்.
ஈரோட்டில் நடந்த மாணவர்களுக்கான விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகையில்,
தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் சேர்ந்த மாணவர்களிடம் அதிகபட்சமாக ரூ. 25,000 வரை மட்டுமேவசூலிக்க முடியும்.
அதே போல மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களிடம் ரூ. 30,000 மட்டுமே வசூலிக்கலாம். அதற்குமேல் வசூலித்தால், சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தாளாளர் மற்றும்நிர்வாகிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்க வருகிற 23ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. சென்னை,மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கவுன்சிலிங் நடக்கவுள்ளது.
அதே போல தங்கள் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்பரிந்துரைத்துள்ள ஊதியத்தைத் தர மறுக்கும் கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


