மாணவி மானபங்க கொலை: மிருகத்துக்கு 24 ஆண்டு சிறை!
சென்னை:
சென்னை தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரி அருகே கல்லூரி மாணவியை மானபங்கப்படுத்தி கொலை செய்த நபருக்கு24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் கடந்த 1999ம் ஆண்டு 18 வயது இளம்பெண்ணின் பிணம்கண்டுபிடிக்கப்பட்டது. அப்பெண் கல்லூரி மாணவி ராஜேஸ்வரி என்றும், படப்பை பகுதியைச் சேர்ந்தவர் என்றும்பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக முருகன், ரவிக்குமார் என்ற குண்டு ரவி, வேல், குட்டி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நான்குபேரும் குடிபோதையில் ராஜேஸ்வயை கற்பழித்துள்ளனர். அப்போது அவர் சப்தம் போடவே, குண்டுரவி, ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். ராஜேஸ்வரி இறந்த நிலையிலும் அவரைமிருகத்தனமாக பலாத்காரம் செய்துள்ளார் இவர்.
இந்த வழக்கு செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் குண்டு ரவிக்கு கொலைசெய்ததற்காக 14 ஆண்டுகளும், கற்பழித்ததற்காக 10 ஆண்டு தண்டனையும், ரூ 2000 அபராதமும்விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
முருகன், குட்டி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு தண்டனை மற்றும் தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.வேலுக்கு 5 ஆண்டு தண்டனை மற்றும் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.


