For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி- ஸ்டாலினைப் பிரிக்க நடந்த கொலை இது: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுகவை அரசியல்ரீதியில் பழிவாங்கவே அழகிரி கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அழகிரி திருச்சி சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் இந்தக் கைது குறித்து கருணாநிதி கூறியதாவது:

அழகிரியும் ஸ்டாலினும் சேர்ந்து இருப்பதை விரும்பாத சிலர் தான் இந்தக் கொடூரக் கொலையைச் செய்துள்ளனர்.அமெரிக்காவில் இருந்த ஸ்டாலின் அழகிரியுடன் நீண்ட நேரம் போனில் பேசியதை நானே உங்களிடம்(நிருபர்கள்) சமீபத்தில் தெரிவித்தேன்.

அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதைப் பிடிக்காத சிலர் தான் இந்தக் கொலையைச் செய்யதூண்டி விட்டுள்ளனர். இந்தக் கொலை நடந்ததே அழகிரியையும் ஸ்டாலினையும் பிரிக்கத் தான். சிலரதுதூண்டுதலும் இதன் பின்னணியில் இருந்துள்ளது. இதைத் தூண்டியவர்கள் யார் என்று கண்டுபிடித்து உண்மையானகுற்றவாளிகளை ஜெயலலிதா அரசு கைது செய்ய வேண்டும்.

அழகிரியைக் கைது செய்து அரசியல் பழிவாங்கல் நடத்திக் கொண்டிருப்பதைவிட உண்மையானகொலையாளிகளைப் பிடித்தால் நான் வரேவேற்பேன்.

கிருட்டிணன் மரணத்தை வைத்து அழகிரியைக் கைது செய்ததன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காயைஅடித்துள்ளனர் போலீசார். அழகிரியின் கைது பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பற்கு சரியான உதாரணம்.எனது மகன்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் என்னை மிகவும்வருத்துகிறது.

தா.கிருட்டிணனை திமுகவினர் தான் கொலை செய்ததாகக் கூறி கட்சியினரைக் கைது செய்து வழக்குகளில் சிக்கவைக்கும் முயற்சியில் ஜெயலலிதா அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் உண்மையான குற்றவாளி தப்ப ஏதுவாகிவிடும்.

திமுகவில் கோஷ்டிப் பூசல் என்பது அண்ணா காலத்திலிருந்தே இருக்கத்தான் செய்கிறது. இதுஒன்றும் புதில்ல. சிலர் இறக்கவும் செய்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் இது சகஜம்தான்.

தா.கிருட்டிணன் கொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளி யார் என்பதை திமுகவினர்தான்கண்டுபிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சியிலும் கடந்த காலங்களில் எத்தனையோ முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.அப்போது தவறான முறையிலேயே சிலர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கழகத்துக்குக்கெட்ட பெயர் உண்டாக்க தற்போது முயற்சி நடக்கிறது.

திமுகவில் மட்டுமல்ல எல்லா கட்சிகளிலும் கோஷ்டிகள் உணடு. அதற்காக நடப்பதற்கெல்லாம் கோஷ்டிகளைகுறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்றார் கருணாநிதி.

வாரிசு அரசியல்: கருணாநிதி பதில்தொடர்ந்து நடந்த பேட்டியில்,

நிருபர்: மகன்களை கட்சியில் சேர்த்ததால் தானே இவ்வளவு பிரச்சனைகளும் வந்தன?

(இடைமறித்த) அன்பழகன்: இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். எந்த இயக்கத்திலேயே அந்தக்குடும்பத்தினர் இடம் பெறாமல் இருக்கிறார்கள். திமுக என்ற தோட்டத்திலேயே இயற்கையாக வளர்ந்த மரங்கள்ஸ்டாலினும் அழகிரியும். சிறுவயதில் இருந்தே கட்திப் பணி ஆற்றியவர்கள்.

ஆற்காடு வீராசாமி: மூப்பனார் அவர்களின் மகன் வரவில்லையா. ராஜாஜியின் மகன் அரசியலுக்குவரவில்லையா?

அன்பழகன்: ஸ்டாலினும் அழகிரியும் தியாகங்களைச் செய்து கட்சியில் வளர்ந்தவர்கள். 76ம் ஆண்டில் மிசாகைதியாக ஓராண்டு சிறையிலே வாடியவன் ஸ்டாலின். அவருக்கு அரசியல் நடத்த யோக்கியதை இல்லையா?தந்தையிடம் அனுமதி பெற்றா இவர்கள் கட்சியில் சேர்ந்தார்கள். சிறு வயதிலேயே கட்சிக்கு வந்துவிட்டவர்கள்இவர்கள். ஸ்டாலினும் அழகிரியும் திமுகவின் இரு கண்களைப் போன்றவர்கள். அழகிரியின் கைது விவகாரத்தைநீதிமன்றத்தில் சந்திப்போம்.

ஆற்காடு வீராசாமி: ஒரு குடும்பத்திலே தந்தை ஒரு கட்சியிலும் ஒவ்வொரு பிள்ளையும் வெவ்வேறுகட்சிகளிலும் இருந்துள்ளார்கள். ரங்கராஜன் குமாரமங்கலம் குடும்பத்திலேயே நாம் அதை பார்க்கவில்லையா?

கருணாநிதி: ரங்கராஜன் குமாரமங்கலத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தபோது பேசியஆர்.வெங்கட்ராமன் அவருடைய தாத்தா சுப்பராயனுக்கும், தந்தை மோகன் குமாரமங்கலத்துக்கும், பின்னர் பேரன்ரங்கராஜன் குமாரமங்கலத்துக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாகத் தெரிவித்தார். ஆனால், எங்கள்குடும்பம் மிகச் சாதாரண குடும்பம் என்பதால் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள் போலும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X