கோ.சி.மணியின் மகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் மகள் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறைபோலீசார் சோதனை நடத்தினர். அதே போல திருச்சியிலும் சில இடங்களில் சோதனை நடந்தன.
நேற்று மணியின் கும்பகோணம் வீடுகள், தஞ்சாவூரில் உள்ள மகன், உறவினர்கள் வீடுகளில் சோதனைகள்நடத்தப்பட்டன. இந் நிலையில் திருநெல்வேலியில் உள்ள அவரது மகள் தமிழரசியின் வீட்டிலும், திருச்சியில்உள்ள உறவினர்கள் வீட்டிலும் இன்று ரெய்ட் நடந்தது.
திருநெல்வேலி மகாராஜா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலை டி.எஸ்.பி. தலைமையில் வந்த லஞ்சஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர். தமிழரசியின் கணவர் ஜெயராமன் திருநெல்வேலி மாவட்டஅறநிலைத்துறையில் மூத்த அதிகாரியாக உள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சிகளில் குடிநீர் குழாய்கள் பதித்ததில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாகத்தெரிகிறது. இது தொடர்பான ஆதாரங்களை திரட்டும் வகையில் கோ.சி.மணியின் சொத்துக்கள், உறவினர்களின்சொத்துக்கள் குறித்து விவரம் திரட்ட இந்த ரெய்ட்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று சென்னையில் உள்ள கோ.சி.மணியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 11இடங்களில் சோதனை நடந்தது. அப்போது ரூ. 1 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் வருமானத்தையும் மீறிகுவிக்கப்பட்டுள்ளது உறுதியாகியிருப்பதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கண் அறுவை சிகிச்சைகாக மணி சென்னையில் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் தான் இந்த அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன.
திமுக ஆட்சியில் சென்னையில் பாலங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்பட்ட வழக்கிலும்கோ.சி.மணி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


