53 பேரக் குழந்தைகளின் பாட்டி தீக்குளித்துத் தற்கொலை!
சென்னை:
12 குழந்தைகள், 53 பேரக் குழந்தைகளைக் கொண்ட 85 வயது பாட்டி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டர்.
சென்னை ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவருக்கு வயது 85. இந்தப்பாட்டிக்கு12 மகன், மகள்கள் இருந்தனர். அனைவருக்கும் திருமணமும் முடிந்துவிட்டது. 12 மகன், மகள்களில் 11பேர் இறந்தும்விட்டனர். மும்தாஜ் என்ற மகள் மட்டுமே உயிருடன் உள்ளார்.
மகன், மகள்கள் மூலம் பாத்திமா பாட்டிக்கு 53 பேரக் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் பல்வேறு பகுதிகளில்வசித்து வருகிறார்கள். பாத்திமா பீவிக்கு வயோதிகம் காரணமாக எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.
அனைத்து வேலைகளையும் மும்தாஜும், அவரது குழந்தைகளும்தான் செய்து வந்தார்கள்.
மகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு தான் மிகவும் பாரமாக இருப்பதாக பாத்திமா பீவி உணர்ந்தார். இந்தவேதனையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடல் கருகிய நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றிஇறந்தார்.


