அழகிரி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்!
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரையில் உள்ளஅவரது வீட்டிற்கு கொலை மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அழகிரி வீட்டிற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தா.கி கொலைக்கு அழகிரி-ஸ்டாலின் மோதலே காரணம் என்றும், உட்கட்சிப் பூசல் காரணமாகவேஅவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து அழகிரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் மதுரைசத்யசாய் நகரில் உள்ள அழகிரி வீட்டிற்கு கொலை மிரட்டல் வர ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினரின் கவனத்திற்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, ஏற்கனவே கொடுக்கப்பட்ட பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அழகிரியின் வீட்டின் முன் எப்போதும் அவரது ஆதரவாளர்கள், தாதாக்கள், ரெளடிக் கும்பல்கள்பாதுகாப்பாக இருப்பது வழக்கம். இப்போது அதையும் தாண்டி போலீஸ் பாதுகாப்பையும் அவரதுகுடும்பம் கோரியுள்ளது.
இதற்கிடையே த.கிருட்டிணனின் கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படையினர் விசாரணையில்ஈடுபட்டுள்ளதாகவும், கொலையாளிகள் விரைவில் பிடிபடுவர் என்றும் மதுரை மாநகர காவல்துறைஆணையர் கந்தசாமி நிருபர்களிடம் கூறினார்.


