For Daily Alerts
Just In
வைகோவுடன் பெர்னாண்டசின் தூதர்கள் ஆலோசனை
வேலூர்:
மத்திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் விவகாரத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்துமதிமுக தலைவர் வைகோவுடன் விவாதிக்குமாறு இப்போது சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சரும் தேசியஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ் பெர்னாண்டஸை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகத்தெரிகிறது.
இதையடுத்து பெர்னாண்டஸ் தனக்கு நெருக்கமான சிலரை வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும்தெரிகிறது.
அவர்கள் மூலம் வைகோவின் கருத்தை அறிந்த பிறகு செஞ்சி ராமச்சந்திரன் மீது இன்றே வாஜ்பாய் நடவடிக்கைஎடுப்பார்.
கடற்படையினரின் விழாவில் பங்கேற்க பெர்னாண்டஸ் சென்னை வந்துள்ளார்.


