8,000 திருட்டு விசிடிக்கள் பறிமுதல்: 2 பேர் கைது
சென்னை:
புதிய கீதை, சாமி, அரசு உள்ளிட்ட சமீபத்தில் வெளிவந்த படங்களன் திருட்டு விசிடிக்கள் உள்பட 8,000 திருட்டுவிசிடிக்களை சென்னை நகர காவல்துறையினர் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனர்.
சென்னை நகரில் திருட்டு விசிடி வேட்டை அவ்வப்போது நடந்து வருகிறது. இருப்பினும், தொடர்ந்து திருட்டுவிசிடிக்கள் புழக்கத்தில் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
இந் நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 8000க்கும் மேற்பட்ட திருட்டுவிசிடிக்கள் சிக்கியுள்ளன. தியாகாரய நகர், முகப்பேர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்த திருட்டு விசிடிசோதனையில் 8,000க்கும் மேற்பட்ட விசிடிக்கள் சிக்கின.
சாமி, அரசு, புதிய கீதை என புதிய படங்கள் அடங்கிய 1,800 தமிழ் திருட்டு விசிடிக்கள் மற்றும் 400 ஆபாசவிசிடிக்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.
இதுதொடர்பாக முருகன் மற்றும் ராதாகிருஷ்ணன் என்ற இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள்கல்லூரியில் படித்துக் கொண்டே திருட்டி விசிடிக்களைத் தயார் செய்து விற்று வந்துள்ளனர்.


