For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று மத்திய அமைச்சரவை மாற்றம்: கூட்டணி கட்சிகளையே உடைக்க பா.ஜ.க. திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மத்திய அமைச்சரவை இன்று மாலை மாற்றி அமைக்கப்படுகிறது.

ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்கும் முயற்சிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதால் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் சேர மறுத்துவிட்டார்.

பல முறை பதவி விலகி அமைச்சரவையில் சேர்ந்தவர் மம்தாய இப்போது மீண்டும் அவரை அமைச்சராக்க பிரதமர்வாஜ்பாய் முன் வந்துள்ளார். ஆனால், அதே நேரத்தில் மம்தாவின் கட்சியைச் சேர்ந்த சுதீப்பண்டோபாத்யாவையும் அமைச்சராக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. ஆனால், இது குறித்து மம்தா பானர்ஜியுடன்வாஜ்பாய் ஆலோசிக்கவேயில்லை.

தனக்கும், தனது கட்சியைச் சேர்ந்த அக்பர் அலி கானுக்கும் தான் மம்தா அமைச்சரவையில் இடம் கேட்டார்.ஆனால், அக்பர் அலி கானுக்குப் பதிலாக பண்டோபாத்யாவை அமைச்சராக்க துணைப் பிரதமர் அத்வானிதிட்டமிட்டுள்ளார். இதை மம்தா விரும்பவில்லை.

ஆனால், பண்டோபாத்யாவை அத்வானி இருமுறை தனியே சந்தித்துப் பேசியுள்ளார். அவரை வைத்து மம்தாவின்கட்சியை உடைக்கவும் அத்வானி திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

பண்டோபாத்யாயா நீக்கம்:

இதனால் கடுப்படைந்துவிட்ட மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தை இன்று காலை திடீரென ராஜினாமாசெய்துவிட்டு கட்சியின் செயற்குழுவை கொல்கத்தாவில் அவசரமாக் கூட்டி விவாதித்து வருகிறார். இக் கூட்டத்தில்சுதீப் பண்டோபாத்யாவை மம்தா பானர்ஜி பதவி நீக்கிவிட்டதாகத் தெரிகிறது.

மேலும் பண்டோபாத்யாவை அமைச்சராக்கக் கூடாது என்று பிரதமர் வாஜ்பாய்க்கும் அவர் அவசரக் கடிதம்எழுதியுள்ளார். இது தொடர்பாக வாஜ்பாய் உறுதிமொழி தராத வரை மத்திய அமைச்சரவையில் சேர மாட்டேன்என்று அறிவித்துவிட்டார்.

தனது எதிர்ப்பையும் மீறி தனது கட்சியைச் சேர்ந்த எம்.பியை அமைச்சராக்குவதன் மூலம் திரிணமூல்காங்கிரசையே உடைக்க பா.ஜ.க. முயல்வதாக மம்தா நினைக்கிறார். இந்த விவகாரத்தால் மம்தாவை இன்றுநடக்கும் அமைச்சரவை மாற்றத்தில் சேர்ப்பதில்லை என வாஜ்பாய் முடிவு செய்துவிட்டார்.

கூட்டணியில் உள்ளகட்சியையே பா.ஜ.க. உடைக்க முயல்வது மற்ற கூட்டணிக் கட்சிகளையும் அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது.

அஜீத் சிங் கட்சியை உடைக்கவும் திட்டம்:

விவசாயத்துறை அமைச்சராக இருந்த அஜீத் சிங்குக்கு பிரதமர் வாஜ்பாயுடன் மோதல் எழுந்துள்ளது. இதையடுத்துஅவர் தனது பதவியை நேற்றிரவு ராஜினாமா செய்தார்.

முன்னதாக அஜீத் சிங்கை விவசாயத்துறையில் இருந்து நீக்கிவிட்டு வேறு துறைக்கு மாற்ற வாஜ்பாய்திட்டமிட்டிருந்தார். ஆனால், அதை அஜீத் சிங் விரும்பவில்லை. இதையடுத்து பதவியை விட்டு விலகியுள்ளார்.

அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டும் விலகுவார் என்று தெரிகிறது.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் மாயாவதி- பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு இவரது ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியைச்சேர்ந்த 14 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தந்து வருகின்றனர். இதில் 5 பேர் அமைச்சர்களாகவும் உள்ளனர். தேசியஜனநாயகக் கூட்டணியில் இருந்து அஜீத் சிங் விலகுவதால் இந்த 5 பேரும் இன்றே பதவி விலகப் போவதாகத்தெரிகிறது.

ஆனால், அஜீத் சிங்கின் கட்சி உடைத்து எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுக்க மாயாவதி- பா.ஜ.க. கூட்டணிதிட்டமிட்டுள்ளது. பா.ஜ.க. தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அஜீத் சிங் கூறியுள்ளார்.

அஜீத் சிங்குக்குப் பதிலாக உத்தரப் பிரதேச முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் ராஜ்நாத் சிங் விவசாயத்துறைஅமைச்சராகிறார்.

விமானத்துறை அமைச்சர் மாற்றம்:

அதே போல கடந்த இரு அமைச்சரவை மாற்றங்களின்போதும் தலை தப்பிவிட்ட விமானப் போக்குவரத்துத்துறைஅமைச்சர் ஷானவாஸ் ஹூசேனைை மாற்றிவிட்டு அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.- சிவசேனையின் தீவிர ஆதரவுபெற்ற பிரதாப் சிங் ரூடியை அமர்த்த அத்வானி முடிவு செய்துள்ளார்.

இதை வாஜ்பாயும் ஏற்றுக் கொண்டுவிட்டார். ஹூசேனுக்கு ஜவுளித்துறை வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

இது தவிர மேலும் சில இணையமைச்சர்களும் சேர்க்கப்பட உள்ளனர். அதே நேரத்தில் மற்ற கேபினட்அமைச்சர்களின் துறைகளில் பெரிய மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.

வைகோவின் மெளனம்:

செஞ்சி ராமச்சந்திரன் பதவி விலகிவிட்டதால் மதிமுகவின் இன்னொரு எம்.பிக்கு பதவி தரப்பட வேண்டும்.ஆனால், அது குறித்து பா.ஜ.க. வாய் திறக்கவில்லை. வைகோ தரப்பில் இருந்தும் குரல் ஏதும் எழவில்லை. அவர்தரப்பில் இந்த விவகாரத்தில் ஆழ்ந்த மெளம் தான் பதிலாகக் கிடைக்கிறது.

சி.பி.ஐயை தனது வசம் வைத்திருக்கும் அத்வானி, தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சரை திட்டமிட்டுபழிவாங்கியுள்ளதாக வைகோ கருதுவதாக அவரை சிறையில் சந்தித்துவிட்டு வந்த மதிமுக மூத்த தலைவர்கள்கூறுகின்றனர்.

ராமச்சந்திரனை பதவி விலகக் கூறிவிட்ட வைகோ நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், செஞ்சி ராமச்சந்திரனின்உதவியாளர் செய்த தவறுக்கு அவரைப் பழிவாங்குது தவறானது. நியாயப்படி அவர் பதவி விலக வேண்டியஅவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X