For Daily Alerts
Just In
ராமச்சந்திரனையும் சிபிஐ விசாரிக்கும்
டெல்லி:
உதவியாளரின் ஊழல் தொடர்பாக செஞ்சி ராமச்சந்திரனையும் சிபிஐ விசாரிக்கும் என்று தெரிகிறது.
சிபிஐ இயக்குனர் பி.சி. சர்மா நேற்று பிரதமரைச் சந்தித்து இந்த ஊழல் விவகாரம் குறித்து விளக்கினார். இன்றுதுணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்து விளக்கமளித்தார். சுமார் அரை மணி நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்த சர்மா பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
இப்போது பெருமாள்சாமி மற்றும் ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடக்கிறது. இதைத் தொடர்ந்துசெஞ்சி ராமச்சந்திரனையும் கூட விசாரிக்க வாய்ப்புக்கள் உண்டு என்றார்.


