For Daily Alerts
Just In
சங்கராச்சாரியாருடன் தேவே கெளடா சந்திப்பு
காஞ்சிபுரம்:
முன்னாள் பிரதமர் தேவே கெளடா, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார்.
காஞ்சிபுரம் வந்த கெளடா முதலில் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் காமாட்சி அம்மன்கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
பின்னர் காஞ்சி மடத்திற்குச் சென்று ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரை சந்தித்தார்.
சமீபகாலமாக கர்நாடகத்தில் உள்ள ஒக்கலிகா இனத்தின் முக்கிய மடமான தும்கூர் மடத்துக்கும் தேவேகெளடாவுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதையடுத்து அந்த மடாதிபதியை ஒடுக்க தனது ஆதரவாளர்ஒருவரைத் தூண்டிவிட்டு மடத்தைத் துவங்க வைத்துள்ளார்.
இதனால் ஒக்கலிகா இன மக்களையே துண்டாட கெளடா முயல்வதாக பல்வேறு மடங்கள் அவரைகண்டித்து வருகின்றன. இந் நிலையில் அவர் சங்கராச்சாரியாரைச் சந்திப்பது முக்கியத்துவம்பெறுகிறது.


