நடமாடும் நீதிமன்றங்கள் சூறை!
சென்னை:
சென்னை போக்குவரத்துக் காவல் தலைமை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தநடமாடும் நீதிமன்ற பேருந்துகள் சூறையாடப்பட்டுள்ளன.
சென்னை வேப்பேரி பகுதியில், போக்குவரத்துக் காவல் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.இங்கு போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது.
நடமாடும் நீதிமன்றங்களாக செயல்படும் 3 பேருந்துகள் இந்த வளாகத்தில் தான் நிறுத்திவைக்கப்படுகின்றன. நேற்றிரவு இந்தப் பேருந்துகளின் மேற்கூரைகளை உடைத்து உள்ளே புகுந்தசிலர் பேருந்துக்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேஜை, நாற்காலிகளும் உடைக்கப்பட்டுள்ளன.சிலதஸ்தாவேஜுகள் கிழிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ளன.
காலையில் 3 பேருந்துகளும் சூறையாடப்பட்டுள்ளதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.காவல் தலைமை அலுவலகத்திலேயே இப்படி நடந்திருப்பது போலீஸார் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விதி மீறல், ரோட்டோரக் கடைகள் தொடர்பான வழக்குகள், நடுரோட்டில் நடக்கும் சண்டை உள்பட சிறுவழக்குள் இந்த நடமாடும் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாகும். இந்த நீதிமன்றத்தால்தண்டனை பெற்ற யாரோ தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.


