• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருணாநிதியை கண்டித்து, ஜெவை வாழ்த்தி திமுக தீர்மானம்!

By Staff
|

சென்னை:

இதுவரை இல்லாத அளவுக்கு திமுகவில் உட்கட்சிப் பூசல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

சிவகங்கை மாவட்ட திமுகவினர் கட்சியின் தலைவர் கருணாநிதியைக் கண்டித்தும், முதல்வர் ஜெயலலிதாவைப்புகழ்ந்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

வேலூர் மாவட்ட திமுகவினர் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்து கருணாநிதியைக்கண்டித்து கோஷம் போட்டுவிட்டுச் சென்றனர். இதைத் தடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது திமுகதலைமை.

தென் மாவட்டங்களில் ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியின் ஆதரவாளர்களும் வட மாவட்டங்களில் அழகிரிக்குஸ்டாலின் ஆதரவாளர்களும் குடிமிப்பிடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சண்டை ஒரு பக்கம் இருக்க, லோக்கல் திமுக கோஷ்டிகளும் களத்தில் பயங்கரமாக மோதி வருகின்றன.

தா.கிருட்டிணன் கொலையைப் பொறுத்த வரை அது ஜாதிப் பிரச்சனையாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தென் மாவட்டங்களில் பெருவாரியாக வசிக்கும் முக்குலத்தோர் சமுதாய மக்களின் ஆதரவை திமுகஇழந்துவிட்டது என்று கருதப்படும் நிலையில் அந்த ஜாதியைச் சேர்ந்த தா.கிருட்டிணனின் கொலையால்திமுகவுக்கும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கும் எனஅந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே அஞ்சுகின்றனர்.

நேற்று முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த திமுகவின் மாவட்டப் பொறுப்பாளர்கள் திடீரென கூட்டம் போட்டனர்.இதில் சிவகங்கை மாவட்டத்தின் முன்னணி திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அதில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் தான் திமுக தலைமையை கலக்கியுள்ளது.

தா.கிருட்டிணன் கொலையில் அழகிரியைக் காப்பாற்றுவதில் தான் கருணாநிதி ஆர்வம் காட்டி வருகிறாரே தவிர,பாதிக்கப்பட்ட கிருட்டிணன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக் கூட கருணாநிதிக்கு மனம் வரவில்லை. இதைவன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் இந்தக் கொலை வழக்கில் வெகு வேகமாக செயல்பட்டு கொலையாளிகளைக் கைது செய்ய நடவடிக்கைஎடுத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறோம்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் போட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்மாவட்டத்தில் திமுக காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில்அதிமுக ஸ்டிராங். மேலும் இப் பகுதி திமுகவினரை வளைக்கும் வேலைகளில் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தசசிலாவின் ஆட்களை அதிமுக இறக்கிவிட்டுள்ளது.

இதனால் கட்சியை எதிர்த்த திமுகவினர் மீது நடவடிக்கை கூட எடுக்க முடியாத நிலையில் திமுக தலைமை உள்ளது.

அதிமுக தான் இந்தக் கொலை விவகாரத்தை ஜாதிரீதியாகத் திருப்பி கருணாநிதிக்குத் தொல்லை தர முயல்வதாகதிமுகவினர் கூறுகின்றனர்.

தென் மாவட்டத்தில் இப்படிப் பிரச்சனை என்றால் வட மாவட்டங்களில் கட்சி நல்ல பலத்தோடு இருந்தும் கூட உட்கட்சிப் பூசலால் கருணாநிதியே நொந்து போய்விடும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

வேலூர் திமுகவினர் தரும் "டென்ஷன்":

வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் சண்முகம் (கருணாநிதிக்கு நெருக்கமா துரைருகனின் ஆதரவாளர்)என்பவரை அமர்த்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. ஆனால் தற்போது அப்பதவியில் இருக்கும் காந்தி அதைவிரும்பவில்லை.

கட்சி மேலிடம் ஒருவரை செயலாளர் பதவியில் திணிப்பதை எதிர்த்து காந்தியின் ஆதரவாளர்கள் நேற்று அண்ணாஅறிவாலயத்துக்கே வந்து கருணாநிதியை எதிர்த்து கோஷம் போட்டனர்.

மேலும் துரைமுருகன் மற்றும் சண்முகத்திற்கு எதிராகவும் கோஷம் போட்டனர். இதனால் அறிவாலயத்தில் பரபரப்புஏற்பட்டது.

பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர்ஓடிவந்து அமைதிப்படுத்தினர். யாரும் திணிக்கப்பட மாட்டார்கள் என்று சமாதானப்படுத்தினர்.

அதன் பின்னர் அவர்களை கருணாநிதியும் சந்தித்துப் பேசினார். வேலூர் தேர்தல் நிலவரம் குறித்து நேரில்கேட்டறிந்தார்.

கட்சிக்காக தனது குடும்பச் சொத்துக்களை இழந்தவர் காந்தி. அண்ணா காலத்தில் இருந்தே கட்சிக்காக உழைத்தவர்.அவரை நான் கைவிடுவேனா என்று கருணாநிதி தழுதழுத்த குரலில் கேட்க அவரை எதிர்த்து கோஷம்போட்டவர்கள் கண் கலங்கியுள்ளனர்.

பின்னர் சில ஜோக்குகளை அடித்து அவர்களை இயல்பு நிலைக்கு வர வைத்து, சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார்கருணாநிதி.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X