For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செயற்கை மழை பெய்விக்க தமிழக அரசு தீவிர முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் நிலவி வரும் கடும் வறட்சியை சமாளிக்க cloud seeding முறையில் செயற்கை மழை பெய்விப்பதற்கானமுயற்சிகளில் அரசு ஈடுபட உள்ளது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென் மேற்குப் பருவக் காற்று வீசும் காலத்தில் மேகங்களின் மீதுசில்வர் அயோடைட் ரசாயனத்தைத் தூவி செயற்கை மழையை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திருத்தணியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 60 கி.மீ. சுற்றளவில் 15 இடங்களில் இந்த செயற்கை மழைக்கானமுயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த 15 இடங்களிலும் தரையில் சக்தி மிக்க ஜெனரேட்டர்கள் (groundgenerators) அமைக்கப்பட்டு அதன் மூலம் சில்வர் அயோடைட் மேகங்களின் மீது (blow) தூவப்படும்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஆண்டு ஜூன்- செப்டம்பரில் தென்மேற்குப் பருவக் காற்று மழையும் செப்டம்பர்- டிசம்பரில் வடகிழக்குப்பருவ மழையும் பொய்த்துவிட்டது. ஆந்திராவில் மழை பொய்த்ததால் கிருஷ்ணா நீரும் கிடைக்காமல்போய்விட்டது. இதனால் சென்னை நகரில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இப்போது சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், சோழாவரம், பூண்டி ஏரிகளில் 1,245 மில்லியன் கனஅடி தான் நீர் உள்ளது. கடந்த ஆண்டில் இருந்ததைவிட பாதிக்கும் குறைவான நீர் இது.

இதனால் சென்னை மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்கி வந்தோம். லாரிகள் மூலமும் ரூ. 10கோடி செலவில் தண்ணீரைக் கொண்டு வந்து வினியோகித்து வருகிறோம்.

இது தவிர செயற்கை மழையைப் பெய்விக்கும் முயற்சிகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த 14ம் தேதி செயற்கைமழை நிபுணர்களை சென்னைக்கு வர வைத்தோம். அவர்கள் அன்றைய தினம் சோதனையிலும் ஈடுபட்டனர்.

சென்னை குடிநீர் வாரியக் கட்டடத்தின் மாடியில் இருந்து சில்வர் அயோடைட் மேகங்களின் மீது அடிக்கப்பட்டது.ஆனால், அன்று காற்றின் வேகம் குறைவாக இருந்ததாலும் ஈரப்பதம் போதிய அளவு இல்லாததாலும் மழைபெய்யவில்லை.

இதையடுத்து அடுத்த நாள் ஹெலிகாப்டர் மூலம் பூண்டி, சோழாவரம், செங்குன்றம் ஏரிகளின் மீது மேகங்களில்சில்வர் அயோடைட் ரசாயனம் தூவப்பட்டது. ஆனால், போதிய மேகக் கூட்டம் இல்லாததால் இச் சோதனைவெற்றி பெறவில்லை.

ஆனாலும் செயற்கை மழையைப் பெறுவது சாத்தியம் தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் சென்னைக்குகுடிநீர் வழங்கும் இரு முக்கிய ஏரிகள் உள்ள பகுதியான திருத்தணி- ஸ்ரீபெரும்புதூர் இடையே 60 கி.மீ. சுற்றளவில்இந்த செயற்கை மழை ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு 15 இடங்களில் அதிக சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் அமைக்கப்படும். அதில் சில்வர் அயோடைட் 1,200டிகிர் சென்டிகிரேடுக்கு சூடாக்கப்படும். சூடாக்கப்பட்ட இந்த ரசாயனத்தின் வாயு மேகக் கூட்டத்தில் தரையில்இருந்து பீய்ச்சப்படும்.

அப்போது காற்றின் வேகம் 20 நாட் ஆகவும் ஈரப்பதம் 70 சதவீதத்துக்கும் குறைவாகவும் இருந்தால் மழைபெய்வித்துவிட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தென் மேற்குப் பருவக் காற்று காலமான ஜூன் முதல்செப்டம்பர் வரை இந்த செயற்கை மழைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

குறைந்தபட்சம் 20 முதல் 25 சதவீத குடிநீர்த் தேவையை இந்த செயற்கை மழை மூலம் பெற்றுவிட முடியும் என்றநம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X