மதுரையில் கன மழை: மின்னல் தாக்கி இளைஞர் பலி
மதுரை:
மதுரையில் திடீரென கன மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் இளைஞர் பலியானார்.
கடும் கோடை வெயில் நிலவி வரும் வேளையில் சென்னை மற்றும் வட மாவட்டங்கள் தவிரதமிழகத்தின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது.
மதுரையில் நேற்றிரவு கன மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மட்டுமே பெய்த இந்தமழையினால் மதுரை நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது.
பெரியார் பஸ் நிலையத்தில் தண்ணீர் நிறைந்தது. அந்த அளவுக்கு மழை கடுமையாக இருந்தது.
பலத்த இடி- மின்னலும் இந்த மழை பெய்தது. அப்போது கோரிப்பாளையம் பகுதியில் நடந்துசென்ற செந்தில் என்ற வாலிபர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி பரிதாபமாகஉயிரிழந்தார்.
இன்றுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம்:
இதற்கிடையே, சென்னை நகரில் தொடர்ந்து கடும் வெயில் நிலவி வருகிறது. நேற்று வெப்பநிலை 108 டிகிரியாக இருந்தது. கத்திரிவெயில் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் தொடர்ந்து கடும் வெயில் அடித்து வருகிறது.
மாலையில்தான் லேசான கடற்காற்று நகர மக்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தரும் விதத்தில் உள்ளது.


